நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது நடித்து முடித்துள்ள 'மாவீரன்' படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் ரிலீஸ் குறித்த தகவல், தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 14 ஆம் தேதி, உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம் 'மாவீரன்'. இந்த படத்தை நடிகர் யோகி பாபுவை கதையின் நாயகனாக வைத்து 'மண்டேலா' படத்தை இயக்கிய இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கி உள்ளார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடித்துள்ளார்.
சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக இயக்குனர் மிஷ்கின் நடித்துள்ள இந்த படத்தில், நீண்ட இடைவேளைக்கு பின்னர்.... பிரபல நடிகை சரிதா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் ரிலீசுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், படத்திற்கான புரோமோஷனில் பட குழுவினர் படு தீவிரம் காட்டி வருகின்றனர். தமிழ் மட்டும் இன்றி மாவீரன் படம் தெலுங்கில் 'மாவீருடு' என்ற பெயரில் வெளியாக உள்ளது.
இந்நிலையில் ஏற்கனவே இப்படத்தில் இருந்து, சீன்... ஆ... சீன்... ஆ... என்கிற பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதைத்தொடர்ந்து 'மாவீரன்' படத்தில், அதிதி ஷங்கர் மற்றும் சிவகார்த்திகேயன் இருவரும் இணைந்து பாடியுள்ள, 'வண்ணாரப்பேட்டையில்' என்று துவங்கும் இரண்டாவது சிங்கிள் பாடல், நாளை மறுதினம். அதாவது ஜூன் 14ஆம் தேதி வெளியாக உள்ளதாக நடிகர் சிவகார்த்திகேயன், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ப்ரோமோவை வெளியிட்டு அறிவித்துள்ளார்.
மலேசியாவில் முதற்கட்ட படப்பிடிப்பை முடித்த 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி!
இதைத்தொடர்ந்து இந்த பாடலின் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்கச் செய்துள்ளது. 'மாவீரன்' படத்திற்கு ஆடை மற்றும் மண்டேலா ஆகிய படங்களுக்கு இசையமைத்த பரத் ஷங்கர் இசையமைத்துள்ளார். விது அய்யனார் ஒளிப்பதிவில், ஃபிலோமின்ராஜ் படத்தொகுப்பு செய்துள்ளார். தமிழ் - தெலுங்கு என இரு மொழிகளிலும் ஒரே நாளில் இப்படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
from 14.06.2023! pic.twitter.com/k2HrsT4kZu
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan)