முண்டாசுப்பட்டி, ராட்சசன் என இரண்டு பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்த இயக்குனர் ராம்குமார் - நடிகர் விஷ்ணுவிஷால் கூட்டணி தற்போது மூன்றாவது முறையாக இணைந்துள்ளது.
தமிழ் திரையுலகில் நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் ஜொலித்து வருபவர் விஷ்ணு விஷால். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த கட்டா குஸ்தி திரைப்படம் கமர்ஷியல் ஹிட் அடித்தது. இதையடுத்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் லால் சலாம் திரைப்படத்தில் நடித்து வருகிறார் விஷ்ணு விஷால். கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்தில் அவருடன் சேர்ந்து நடிகர் விக்ராந்தும் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
லால் சலாம் படத்திற்கு கூடுதல் சிறப்பு சேர்க்கும் விதமாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தும் இப்படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார். லால் சலாம் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இதுதவிர மோகன் தாஸ் என்கிற படத்திலும் நடித்து முடித்துள்ளார் விஷ்ணு விஷால். இதில் அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். இப்படம் விரைவில் நேரடியாக ஜியோ சினிமாஸ் ஓடிடி தளத்தில் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்... ரைட் இஸ் பேக்... ஆக்ஷனில் மிரட்டும் சுந்தர் சி-யின் ‘தலைநகரம் 2’ டிரைலர் இதோ
இதனிடையே கடந்த வாரம் சரத்குமார், அசோக் செல்வன் நடிப்பில் போர் தொழில் என்கிற கிரைம் திரில்லர் திரைப்படம் ரிலீஸ் ஆனது. விக்னேஷ் ராஜா என்கிற புதுமுக இயக்குனர் இயக்கியுள்ள இப்படத்தின் நிகிலா விமல் நாயகியாக நடித்துள்ளார். இப்படத்திற்கு விமர்சன ரீதியாக மாபெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. படம் பார்த்த அனைவரும் இது ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்த ராட்சசன் படத்திற்கு இணையாக உள்ளதாக பாராட்டி வந்தனர்.
This one im damn excited about….
Never done this before❤️❤️❤️❤️❤️ https://t.co/k4JORZW1S8
இப்படி போர் தொழில் படத்தை ராட்சசன் படத்தோடு ஒப்பிட்டு பாராட்டு மழை குவிந்து வரும் நிலையில், ராட்சசன் கூட்டணி மீண்டும் இணைய உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. விஷ்ணு விஷாலின் 21-வது படமாக உருவாக உள்ள இப்படத்தை ராட்சசன் படத்தின் இயக்குனர் ராம்குமார் இயக்க உள்ளார் என்றும் இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் அறிவித்துள்ளனர். ஏற்கனவே முண்டாசுபட்டி, ராட்சசன் என இரண்டு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்த விஷ்ணு விஷால் - ராம் குமார் கூட்டணி இப்படம் மூலம் மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்துள்ளனர்.
இதையும் படியுங்கள்... தந்தைக்கு டஃப் கொடுக்க ரெடியான கதீஜா... இசையமைப்பாளராக அறிமுகமாகும் ஏ.ஆர்.ரகுமான் மகள்