Sivakarthikeyan |மாநாடு குறித்த பதிவு ; "இப்ப சொல்லுங்க நான் செய்தது தவறா" ட்வீட் பதிவு செய்த சிவகார்த்திகேயன்

Published : Nov 25, 2021, 01:33 PM ISTUpdated : Nov 25, 2021, 01:34 PM IST
Sivakarthikeyan |மாநாடு குறித்த பதிவு ; "இப்ப சொல்லுங்க நான் செய்தது தவறா" ட்வீட் பதிவு செய்த சிவகார்த்திகேயன்

சுருக்கம்

Sivakarthikeyan | நடிகர் சிவகார்த்திகேயன் மாநாடு படக்குழுவிற்கு செய்துள்ள வாழ்த்து செய்தியில் தனது  பெயரை விட்டு விட்டதற்கு பிரேம் ஜீ கோபித்துக்கொள்வது போல "நான் சார்" என கேட்டிருந்தார். இந்த பதிவிற்கு பதிலளித்துள்ளார்  சிவகார்த்திகேயன்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் மாநாடு. சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷனும், வில்லனாக எஸ்.ஜே.சூர்யாவும் நடித்துள்ளார். மேலும் எஸ்.ஏ.சந்திரசேகர், ஒய்.ஜி.மகேந்திரன், மனோஜ் பாரதிராஜா, பிரேம்ஜி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

இந்த படம் தீபாவளிக்கு ரிலீஸ் என அறிவிக்கப்பட்டு பின்னர் நவம்பர் 25- ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டது. பின்னர் லைசன்ஸ் பிரச்சனையால் ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போவதாக சுரேஷ் காமாட்சி நேற்று மாலை அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். பின்னர் பைனான்சியர் - தயாரிப்பளார் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பிறகு என் ஓ சி வழங்கப்பட்டதை அடுத்து திட்டமிட்டபடி இன்று படம் ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. 

ஆனால் அதிகாலை முதல் காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அதாவது அனைத்து திரையரங்குகளிலும் சிறப்பு காட்சி ரத்து செய்யப்பட்டது. பின்னர் ஒருவழியாக  அனைத்து திரையரங்குகளிலும் 7.30 காட்சி திரையிடப்பட்டுள்ளது.

காலை முதல் பட்டாசு பாலபிஷேகம் என மாஸ் காட்டி வந்த ரசிகர்கள் சிறப்பு காட்சி ரத்தால் சற்று ஏமாற்றம் அடைந்திருந்தாலும். படத்தின் டைட்டிலிருந்து படத்தின் முதல் பாதி வரை ஒவ்வொரு நொடியையும்  வர்ணித்து தள்ளுகின்றனர்.  

இதற்கிடையே சூர்யா, சிவகார்த்திகேயன், பா.ரஞ்சித், எஸ் ஜே சூர்யா, மனோபாலா உள்ளிட்ட திரை பிரபலங்கள்  வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயன் படக்குழுவிற்கு செய்துள்ள வாழ்த்து செய்தியில் தனது  பெயரை விட்டு விட்டதற்கு பிரேம் ஜீ கோபித்துக்கொள்வது போல நான் சார் என கேட்டிருந்தார். இந்த பதிவிற்கு பதிலளித்துள்ள சிவகார்த்திகேயன் ; நீங்களும் வெங்கட் பிரபுவும் ஒன்று தானே. இப்போது சொல்லுங்கள் நான் செய்தது தவறா என கேட்டுள்ளார். இந்த பதிவை ரசிகர்கள் வைரலாகி வருகின்றனர்.

 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

அம்மாடியோவ்! முதல்வர் விஜய்யை சந்தித்தபோது ரஷ்மிகா கட்டியிருந்த சேலையின் விலை இத்தனை ஆயிரமா?
Jailer 2 : ஜனநாயகன் சாதனையை சல்லி சல்லியாய் நொறுக்க ரெடியான ஜெயிலர் 2... முன்பதிவிலேயே இத்தனை கோடி வசூலா?