"Puneeth Rajkumar "| RRR பட "நாட்டுக்கூத்து " பாடலுக்கு நடனம் ஆடும் புனித் ராஜ்குமார் ; வைரல் வீடியோ உள்ளே!!

Kanmani P   | Asianet News
Published : Nov 25, 2021, 11:40 AM ISTUpdated : Nov 25, 2021, 12:12 PM IST
"Puneeth Rajkumar "| RRR பட "நாட்டுக்கூத்து " பாடலுக்கு நடனம் ஆடும் புனித் ராஜ்குமார் ; வைரல் வீடியோ உள்ளே!!

சுருக்கம்

Puneeth Rajkumar | மறைந்த தெலுங்கு பவர்ஸ்டார் புனித் ராஜ்குமார் நாட்டுக்கூத்து பாடலுக்கு நடனம் ஆடுவது போன்ற வீடியோவை அவரது ரசிகர்கள் உருவாக்கியுள்ளனர்.

சுதந்திர போராட்ட வீரர்களின் கதையை மையமாக கொண்டு   “பாகுபலி” இயக்குநர் ராஜமெளலி “ஆர்ஆர்ஆர்” என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். உடன் அஜய் தேவ்கன், இவர்களுடன் ஆலியா பட், சமுத்திரக்கனி, ராகுல் ராமகிருஷ்ணா, அலிசான் டூடி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இந்த படத்திற்கு பாகுபலி படத்திற்கு இசையமைத்த கீரவாணி இசையமைக்கிறார். செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்கிறார். 350 கோடியிலிருந்து 400 கோடி வரையிலான செலவில். விறுவிறுப்பாக உருவாகி வரும், இந்த படம் வரும் ஜனவரியில் திரையிட தயாராகி வருகிறது.

ஏற்கனவே இந்த படத்திலிருந்து மோஷன் போஸ்டர், முதல் சிங்கிளாக "நட்பு" பாடல். இரண்டாம்  சிங்கிளாக "நாட்டுக்கூத்து" பாடல் வெளியாகியுள்ளது. இதில் சமீபத்தில் வெளியான நாட்டு கூத்து பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதில் ராம்சரண் - ஜூனியர் என்.டி.ஆர் இவர்களின் மின்னல் வேக நடனம் ரசிகர்களை கண்கொட்டாமல் பார்க்க வைக்கும் விதத்தில் அமைத்துள்ளது. தவிர அனைத்து மொழியிலும் இந்த பாடல் மொழிபெயர்க்கப்பட்டு வெளியானது.

இந்நிலையில் மறைந்த தெலுங்கு பவர்ஸ்டார் புனித் ராஜ்குமார் நாட்டு கூத்து பாடலுக்கு நடனம் ஆடுவது போன்ற வீடியோவை அவரது ரசிகர்கள் உருவாக்கியுள்ளனர்.

மறைந்த திரை பிரபலம் புனித் தனது அதி வேக நடன அசைவுகளுக்கு பெயர் போனவர். அழகான அசைவுகளுடன் அமையும் அவரது நடனங்கள் மிக பிரபலமானவை. அவ்வாறு புனித் ராஜ்குமார் ஆடிய பல பாடல்களின் நாடன அசைவுகளை ஒன்று சேர்த்து அவர் நாட்டுக்கூத்து பாடலுக்கு ஆடுவது போன்று ரசிகர்கள் வீடியோ ஒன்றை உருவாக்கியுள்ளனர். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 

"

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நாக சைதன்யாவை பற்றி அப்போது தெரியாது: அமலா உருக்கம்!
பெத்த மகள் என்று கூட பார்க்காமல் துப்பாக்கியை காட்டி எமோஷனல் பிளாக்மெயில் செய்த சாமுண்டீஸ்வரி!