"Aamir khan marriage" |"தங்கல்" மகளுடன் அமீர்கான் மூன்றாவது திருமணமா ? நடிகை பாத்திமா கூறிய அதிர்ச்சி தகவல் !!

Kanmani P   | Asianet News
Published : Nov 25, 2021, 09:33 AM ISTUpdated : Nov 25, 2021, 10:07 AM IST
"Aamir khan marriage" |"தங்கல்" மகளுடன் அமீர்கான் மூன்றாவது திருமணமா ? நடிகை பாத்திமா கூறிய அதிர்ச்சி தகவல் !!

சுருக்கம்

"Aamir khan marriage" | "தங்கல்" படத்தில் மகளாக நடித்துள்ள பாத்திமாவை அமீர்கான் மூன்றாவது திருமணம் செய்ய உள்ளதாக தகவல் பரவி வருகிறது.

கடந்த 2016-ம் ஆண்டு வெளியான தங்கல் நிதேஷ் திவாரி இயக்கத்தில், அமீர் கான் நடித்த படம். உண்மை சம்பவத்தை தழுவிய கதை களத்தை கொண்டிருந்தது தங்கல். இந்த படம் இந்தி, தமிழ், தெலுங்கு என 3 மொழிகளில் இந்தியா முழுவதும் வெளியிடப்பட்டு வசூலில் சாதனை படைத்தது. இதைத் தொடர்ந்து சீனாவில்  வெளியிடப்பட்ட  அங்கு சுமார் 1130 கோடி ரூபாயும், உலகம் முழுக்க மொத்தம் 1913 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. 


Fatima Sana Shaikh, Sanya Malhotra, Zaira Wasim ஆகிய மூவரும் நடிகர் அமீர்கானின் மகள்களாக நடித்து அசத்தியிருந்தனர். இவர்களின் குத்து சண்டை பயிற்சி மிக லாவகமாக அமைந்து ரசிகர்களை கவர்ந்திருந்தது.

இந்நிலையில் அமீர்கான் மூன்றாவதாக  திருமணம் குறித்த தகவல்கள் இணையத்தில் வெளியாகியிருக்கின்றன.

 பாலிவுட்டில் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பல அவதாரங்களில் வலம் வருபவர் நடிகர் அமீர்கான். அமீர் தனது முதல் மனைவியான ரீனா தத்தாவை 2002-ல் விவாகரத்து செய்தார். பின்னர்  "லகான்" திரைப்படத்தில் நடித்த போது அந்தப்படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய கிரண் ராவுடனை காதலித்து வந்த அமீர்கான்  2005-ல் திருமணம் செய்துக்கொண்டனர். இவர்களுக்கு ஆசாத் என்ற மகன் உள்ளார். 

ஆனால் அமீர்கான் - கிரண் ராவ் இருவரும் கடந்த ஜூலை மாதம் தங்களது விவாகரத்தை அறிவித்தனர். அப்போது 'இந்த விவாகரத்து ஒரு முடிவு அல்ல. ஒரு புதிய பயணத்தின் தொடக்கமாக நீங்கள் காண்பீர்கள்' என தெரிவித்திருந்தனர்.

இவ்வாறு இருக்க மகளாக நடித்த நடிகையை அமீர்கான் திருமணம் செய்யப்போவதாக வரும் செய்தி காட்டு தீயாய் பரவி வருகிறது.இதற்கிடையே  அமீர்கான் மூன்றாவது திருமணம் குறித்து சமீபத்தில் பேசியிருந்த   பாத்திமா சனா ஷேக்;  இது வெறும் வதந்தி தான் இது பற்றி என்னிடம் கேள்வி கேட்காமல் சிலர் தங்கள் விருப்பம்போல் எழுதுகிறார்கள். இதில் உண்மையில்லை என்று கூறியிருக்கிறார். என்று கடுப்பாக தெரிவித்திருந்தார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

நாக சைதன்யாவை பற்றி அப்போது தெரியாது: அமலா உருக்கம்!
பெத்த மகள் என்று கூட பார்க்காமல் துப்பாக்கியை காட்டி எமோஷனல் பிளாக்மெயில் செய்த சாமுண்டீஸ்வரி!