
மாநாடு படம் துவங்கியதிலிருந்து இரண்டு வருட காலமாக பல கட்ட இன்னல்களை சந்தித்து விட்டது. முதலில் சிம்புவின் கால்ஷீட் பிரச்சனை. பின்னர் ரிலீஸ் செய்வதில் அடுத்தடுத்த தாமதம், தற்போது சிறப்பு காட்சி ரத்து என மாநாடு படத்திற்கு தலைவலி நீண்டு கொண்டே செல்கிறது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் மாநாடு. சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷனும், வில்லனாக எஸ்.ஜே.சூர்யாவும் நடித்துள்ளார். மேலும் எஸ்.ஏ.சந்திரசேகர், ஒய்.ஜி.மகேந்திரன், மனோஜ் பாரதிராஜா, பிரேம்ஜி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த படம் தீபாவளிக்கு ரிலீஸ் என அறிவிக்கப்பட்டு பின்னர் நவம்பர் 25- ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டது. பின்னர் லைசன்ஸ் பிரச்சனையால் ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போவதாக சுரேஷ் காமாட்சி நேற்று மாலை அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். பின்னர் பைனான்சியர் - தயாரிப்பளார் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பிறகு என் ஓ சி வழங்கப்பட்டதை அடுத்து திட்டமிட்டபடி இன்று படம் ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால் அதிகாலை முதல் காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அதாவது அனைத்து திரையரங்குகளிலும் சிறப்பு காட்சி ரத்து செய்யப்பட்டது. பின்னர் ஒருவழியாக அனைத்து திரையரங்குகளிலும் 7.30 காட்சி திரையிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் மாநாடு குறித்து பதிவிட்டுள்ள தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி :
"எத்தனை இடர் வரினும்
எதிர்த்து நின்று வெற்றி கொள்வோம். நான் வீழ்வேனென்று நினைத்தாயோ??!"
என அப்பதிவிட்டுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.