
பிரபல தொலைக்காட்சி ஒன்றில் பிரபல தொகுப்பாளராக இருந்து தற்போது டாப் டென் நாயகர்களில் ஒருவராக மாறிவிட்ட சிவகார்த்திகேயன் முன்னதாக 2012 ஆம் ஆண்டு மெரினா படத்தின் மூலம் தான் திரை உலகிற்கு அறிமுகமாகி இருந்தார். பின்னர் பல ஹிட் படங்களை தனது நடிப்பின் மூலம் ரசிகர்களுக்கு தந்த சிவகார்த்திகேயன் இறுதியாக நடித்த டாக்டர் டான் படங்களை தொடர்ந்து தற்போது பிரின்ஸ், அயலான், மாவீரன் ஆகிய மூன்று படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் வெளிநாட்டு நாயகி மரியா ரியான்ஷாப்கா, சத்யராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
தெலுங்கு தமிழ் என இரு மொழிகளில் படமாக்கப்பட்டு வரும் இந்த படத்தின் மூலம் நேரடியாக டோலிவுட்டிற்கு அறிமுகமாகிறார் சிவகார்த்திகேயன். தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்திற்கு தமன் இசை அமைத்துள்ளார். இதன் வெளியீட்டு தேதி முன்னதாக ஆகஸ்ட் 31 என அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் படம் தீபாவளிக்கு ரிலீஸ் செய்யப்படும் என்னும் விஷயத்தை சிவகார்த்திகேயன், மரியா ரியான்ஷாப்கா, சத்யராஜ் மற்றும் இயக்குனர் அனுதீப் அடங்கிய காட்சிகள் மூலம் பட குழு அறிவித்திருந்தது.
மேலும் செய்திகளுக்கு...தனுஷ் உட்பட படக்குழுவினர் இணைந்து வெளியிட்ட கேப்டன் மில்லர் சூப்பர் அப்டேட்
இதையடுத்து படத்திலிருந்தியு அப்டேட்டுகள் ஒவ்வொன்றாக வெளிவர துவங்கின. அதன்படி பிரின்ஸ்படத்தில் முதல் சிங்களாக பிம்பிளிக்கி பிலாபி என்னும் படத்தால் சமீபத்தில் வெளியானது. இந்த பாடல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
மேலும் செய்திகளுக்கு... என்ன மனுசன்யா இவரு...முதல் படத்திற்காக உயிரை பணையம் வைத்த சூரி.. பிரமித்துப்போன ஸ்டண்ட் மாஸ்டர்...
தற்போது இந்த படத்தில் இரண்டாவது சிங்கள் வெளியாவதற்கான அறிவிப்பை பட குழு தற்போது அறிவித்துள்ளது. ஜெஸ்ஸிகா என்னும் பாடல் நாளை மாலை வெளியாகவுள்ளது.
மேலும் செய்திகளுக்கு...கார்த்தியை தொடர்ந்து..நாவல் தழுவலில் கமிட்டான சூர்யா...மாஸ் டைட்டிலுடன் களமிறங்கும் பிரமாண்ட இயக்குனர்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.