துணிவு...வெல்வோம் சமுத்திரக்கனி போட்ட ட்விட்டால் உடைந்த அஜித் பட உண்மை

Published : Sep 22, 2022, 09:07 AM ISTUpdated : Sep 22, 2022, 05:59 PM IST
துணிவு...வெல்வோம் சமுத்திரக்கனி போட்ட ட்விட்டால் உடைந்த  அஜித் பட உண்மை

சுருக்கம்

சமுத்திரகனி தற்போது அஜித்தின் 61வது படமான துணிவு பட போஸ்டருடன் ட்வீட் செய்துள்ளார். அதில் துணிவு வெல்வோம் என குறிப்பிட்டுள்ளார்.

பிரபல நடிகர் அஜித்குமார் சமீபத்தில் நடித்திருந்த நேர்கொண்ட பார்வை, வலிமை என இரு படங்களும் கலவையான விமர்சனங்களை பெற்றது. இருந்தபோதிலும் மீண்டும் மூன்றாவது முறையாக இயக்குனர் ஹெச் வினோத், தயாரிப்பாளர் போனி கபூருடன் கூட்டணி அமைத்துள்ளார் அஜித் குமார். அதன்படி தற்போது துணிவு படம் உருவாகியுள்ளது. இந்த படத்தின் முதல் பார்வை நேற்றுதான் வெளியாகி இருந்தது. இந்த போஸ்டரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

கையில் துப்பாக்கியுடன் மாஸ் போஸ் கொடுத்திருக்கும் அஜித்தோடு படத்தின் டைட்டில் ரூபாய் நோட்டில் அச்சிடப்பட்டிருப்பது போன்ற போஸ்டரை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டு இருந்தது. அஜித்தின் 61வது படத்திற்கு துணிவு என பெயர் வைக்கப்பட்டிருப்பது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. முன்னதாக இந்த படம் வங்கி கொள்ளை தொடர்பான கதைக்களத்தை கொண்டிருப்பதாக தகவல் வெளியாக இருந்தது.

மேலும் செய்திகளுக்கு...கேரக்டருடன் பக்காவாக பொருந்தி மிரள வைக்கும் செல்வராகவன்.. நானே ஒருவனில் அவருக்கு என்ன ரோல் தெரியுமா?

இதற்காக ஹைதராபாத், பாங்காங், விசாகப்பட்டினம், சென்னை உள்ளிட்ட இடங்களில் செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்றது. முன்னதாக ஹைதராபாத்தில் சென்னையில் உள்ள மவுண்ட்ரோட் போன்ற பெரிய செட் அமைக்கப்பட்டு வங்கி கொள்ளை தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டது. இதில் அஜித் இருவேறு தோற்றங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் மலையாள நாயகி மஞ்சுவாரியர் நாயகியாக நடிப்பதாகவும் உறுதிப்படுத்தப்பட்டது.

ஏற்கனவே 80 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் மீதமுள்ள காட்சிகள்  தற்போது தாய்லாந்து நாட்டில் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே ஓய்வு நேரத்தில் உலகம் சுற்றப்புறப்பட்ட அஜித்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளத்தை நிரப்பி வந்தன. இதைத்தொடர்ந்து தற்போது தனது சுற்றுலா முடிந்து ஊர் திரும்பி உள்ள அஜித் வரும் 23ஆம் தேதி தாய்லாந்து சென்று படப்பிடிப்பில் கலந்து கொள்வார் எனவும் கூறப்படுகிறது.

மேலும் செய்திகளுக்கு...வெந்து தணிந்தது பட நாயகியா இது...சித்தி இத்னானியின் கவர்ச்சி பொம்ஜிக்கும் போஸ் இதோ !

இந்த படமும் வாரிசு படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் பொங்கல் அன்றே ரிலீஸ் ஆகும் என்றும் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். ஆயினும் இதுவரை எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. படத்தில் நடிக்கும் நடிகர்களோ அல்லது படக்குழு குறித்த எந்த தகவலும் இல்லை. இந்நிலையில் சமுத்திரகனி தற்போது அஜித்தின் 61வது படமான துணிவு பட போஸ்டருடன் ட்வீட் செய்துள்ளார். அதில் துணிவு வெல்வோம் என குறிப்பிட்டுள்ளார். அதோடு அஜித்உடன் நிற்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். இதன் மூலம் துணிவு படத்தில் சமுத்திரக்கனி இணைந்திருக்கலாம் என்கிற உண்மை வெளியாகி உள்ளது. தற்போது துணிவு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூகவலைதளத்தில் ட்ரண்டாகி வருகிறது. 

மேலும் செய்திகளுக்கு...திடீரென வாரிசு படப்பிடிப்பு பாதியில் நிறுத்தம் என்ன காரணம் தெரியுமா ?

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பிக் பாஸ் எலிமினேஷனில் செம ட்விஸ்ட்... அதிரடியாக எவிக்ட் ஆன இரண்டு பேர் யார்... யார்?
சென்னைக்கு 6500 ரூபா டிக்கெட் இப்போ 83 ஆயிரம்... இண்டிகோ பிரச்சனையால் வெளிமாநிலத்தில் லாக் ஆன ரோபோ சங்கர் மகள்