காமெடியில் தனி முத்திரை பதித்தவர் சந்தானம் - சிவகார்த்திகேயன் புகழாராம்...

Asianet News Tamil  
Published : Dec 16, 2017, 11:03 AM ISTUpdated : Sep 19, 2018, 01:41 AM IST
காமெடியில் தனி முத்திரை பதித்தவர் சந்தானம்  - சிவகார்த்திகேயன் புகழாராம்...

சுருக்கம்

Sivakarthikeyan praised Santhanam

கௌண்டமணி, விவேக், வடிவேலுக்குப் பிறகு காமெடியில் தனி முத்திரை பதித்தவர் சந்தானம் என்று நடிகர் சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.

மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘வேலைக்காரன்’.

இந்தப் படத்தில் நயன்தாரா கதாநாயகியாகவும், பகத் பாசில் வில்லனாக நடித்துள்ளார். இவர்களோடு சினேகா, பிரகாஷ் ராஜ், ரோபோ சங்கர், ரோகிணி, ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ் ஆகியோரும் நடித்துள்ளனர். இந்தப் படம் டிசம்பர் 22-ஆம் தேதி ரிலீஸாகிறது.

அதே தேதியில் சந்தானம் நடித்துள்ள ‘சக்க போடு போடு ராஜா’ படமும் ரிலீஸாகிறது. இதுகுறித்து   ‘சந்தானம் படம் உங்களுக்குப் போட்டியா?’ என்று சிவகார்த்திகேயனிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு அவர் பதில் அளித்துள்ளார்.

அதில், “நான் எந்தப் படத்தையும் போட்டியாக நினைக்கமாட்டேன். என் படங்கள்தான் எனக்குப் போட்டி.

கௌண்டமணி, விவேக், வடிவேலுக்குப் பிறகு காமெடியில் தனி முத்திரை பதித்தவர் சந்தானம். அவர் இடத்தை நிரப்ப இன்னும் யாரும் வரவில்லை.

கதாநாயகனாக நடிக்க அவர் எடுத்த முடிவு துணிச்சலானது. ஹீரோவாக அவர் வெற்றி பெறுவார்  என நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Simbu Net Worth : கோலிவுட் ‘அரசன்’ சிம்பு இத்தனை கோடி சொத்துக்களுக்கு அதிபதியா?
பாண்டியனை வம்பில் மாட்டிவிட்ட வானதி... நள்ளிரவில் காத்திருந்த சம்பவம் - அய்யனார் துணை சீரியல் அப்டேட்