எளிமையாக நடந்த மெரினா ஆடியோ லான்ச் vs மாவீரன் Pre Release Event - சிவகார்த்திகேயனின் விஸ்வரூப வளர்ச்சி!

By Ansgar R  |  First Published Jul 2, 2023, 10:15 AM IST

ஆரம்ப காலகட்டத்தில் கல்லூரியில் துவங்கிய இந்த சினிமா ஆசை, சென்னைக்கு வந்ததும் பிரபல தொலைக்காட்சி நிறுவனத்தில் நடைபெற்ற ரியாலிட்டி ஷோக்களில் அவரை பங்கேற்க்க வைத்தது.


நடுத்தர வசதி கொண்ட குடும்பத்தில் பிறந்து, நல்ல அறிவுள்ள மாணவனாக திகழ்ந்து, இறுதியில் இன்று தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களின் வரிசையில் நிற்கும் ஒரு "முரண்பாட்டு மூட்டை" தான் நடிகர் சிவகார்த்திகேயன். 

சிங்கம்புணரியில் பிறந்து, திருச்சியில் தனது கல்லூரி படிப்பை முடித்து, ஒரு "Stand Up Comedy" கலைஞராக சென்னை நோக்கி தனது பயணத்தை துவங்கியவர் அவர். ஆரம்ப காலகட்டத்தில் கல்லூரியில் துவங்கிய இந்த சினிமா ஆசை, சென்னைக்கு வந்ததும் பிரபல தொலைக்காட்சி நிறுவனத்தில் நடைபெற்ற ரியாலிட்டி ஷோக்களில் அவரை பங்கேற்க்க வைத்தது.

Tap to resize

Latest Videos

அதன் பிறகு அதன் மூலம் கிடைத்த வெற்றியால் அதே தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக மாறி தனது பயணத்தை தொடர்ந்து அப்டேட் செய்து கொண்டே இருந்தார் சிவக்கார்த்திகேயன். இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகளுக்கு என்று தனி ரசிகர் கூட்டம் உண்டு. துடுக்கான பேச்சும், சட்டென்று இவர் போடும் கவுண்டர்களும் இவரை திரைத்துறை பக்கம் செல்ல உந்தியது. 

இதையும் படியுங்கள் : நடிகர் விஜய்யை போல் மாஸ் ஆக நடனமாடி அசத்திய பிரபல இந்திய கிரிக்கெட் வீரர்

அந்த உந்துதலின் காரணமாக கடந்த 2012ம் ஆண்டு இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான "மெரினா" என்ற திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரம் ஏற்று நடித்தார்'. அதன் பிறகு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய தனுஷின் 3 திரைப்படத்தில் அவருடைய நண்பனாக தோன்றினார். 

அதனை தொடர்ந்து மனங்கொத்தி பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, காக்கிச்சட்டை என்று இவருடைய வெற்றி படங்களின் அணிவரிசை தொடங்கியது. தற்போது தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களின் பட்டியலில் இணைந்திருக்கிறார் "மாவீரன்" சிவகார்த்திகேயன். 

தற்பொழுது இவருடைய நடிப்பில் மாவீரன் மற்றும் அயலான் உள்ளிட்ட திரைப்படங்கள் விரைவில் வெளிவர இருக்கின்றது. மேலும் ராஜ்கமல் நிறுவனம் தயாரித்து வரும் ஒரு திரைப்படத்திலும் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார், அது அவருடைய 21வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. 

இன்று மாவீரன் படத்தின் டிரைலர் பெரிய அளவில் ஒரு தனியார் கல்லூரியில் வெளியாகவுள்ள நிலையில், ஒரு விஷயம் இணையத்தில் ட்ரெண்டாகி வருகின்றது. 11 ஆண்டுகளுக்கு முன்பு "மெரினா" படத்தின் ஆடியோ லான்ச் சென்னை மெரினா கடற்கரையில் எளிமையான முறையில் நடந்தது. அப்போது அறிமுக நடிகராக அவர் பேசியதையும், இப்பொது விஸ்வரூப வளர்ச்சி அடைந்த சிவகார்த்திகேயன் தனது படங்களின் இசை வெளியீட்டில் பேசிவருவதையும் ஒப்பிட்டு அவரது ரசிகர்கள் அவருடைய வளர்ச்சியை கொண்டாடி வருகின்றனர். 

இதையும் படியுங்கள் : ஆஸ்கர் வரை செல்லும் தங்கலான் - தயாரிப்பாளர் தந்த Surprise!

click me!