
இன்று பிறந்த நாள் கொண்டாடி வரும் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு பல பிரபலங்கள் தொடர்ந்து தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது இவர் ஜெயம் ராஜா இயக்கத்தில், நடித்து வரும் படத்தின் டைட்டிலை ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுப்பது போல இன்று மதியம் 12 மணிக்கு அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
இந்த படத்திற்கு 'வேலைக்காரன்' என பெயர் சூட்டியுள்ளனர் இதை உறுதி செய்வதை போல் சிவகார்த்திகேயனின் விக்கிபீடியா பக்கத்தில் இந்த டைட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் இதே டைட்டிலில் கடந்த 1987ஆம் ஆண்டு ரஜினிகாந்த், அமலா நடிப்பில் கே.பாலசந்தர் தயாரிப்பில் எஸ்.பி,.முத்துராமன் இயக்கத்தில் ஒரு படம் வெளிவந்து சூப்பர் ஹிட் ஆகியது என்பது குறிப்பிடத்தக்கது.
முதல்முறையாக கோலிவுட் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து வரும் இந்த படத்தில் முக்கிய வேடம் ஒன்றில் பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் நடித்து வருகிறார். மேலும் சினேகா, பிரகாஷ்ராஜ், தம்பிராமையா உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு இளம் இசைப்புயல் அனிருத் இசையமைக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.