
"நம்ம வீட்டு பிள்ளை" வெற்றிக்குப் பிறகு சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் "ஹீரோ".இரும்புத்திரை பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ள இந்தப் படத்தை கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். மேலும் அர்ஜுன், ரோபோ சங்கர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். சமீபத்தில் சூப்பர் ஹீரோ கெட்-அப்பில் சிவகார்த்திகேயன் கம்பீரமாக நிற்கும் போட்டோ வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலானது.
இதேபோல "ஹீரோ" படத்தின் முதல் பாடலான "மால்ட்டோ கித்தாப்புலே" பாடலும் சமீபத்தில் வெளியாகி யூ-டியூப்பில் கெத்து காட்டியது. இதனையடுத்து படத்தின் டைட்டில் பாடலான செகண்ட் சிங்கிளை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையில், பா.விஜய் வரிகளில் "ஹீரோ" படத்தின் பாடல் மாஸ் ஹிட்டடித்துள்ளது. யுவன் சங்கர் ராஜா, அபி சிமோன் பாடியுள்ள பாடலை சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
பா.விஜய்யின் ஒவ்வொரு வரிகளும் வெற லெவலில் வெறித்தனம் காட்டியுள்ளது. குறிப்பாக அன்பின் முன்பு தோற்று நிற்பவனும் ஹீரோ என்ற அழகிய வரிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அர்த்தமுள்ள வரிகளும், ஹீரோவிற்கான இலக்கணமும் சொல்லும் செகண்ட் சிங்கிள் வெளியான 3 மணி நேரங்களிலேயே 3 மில்லியனுக்கும் மேற்பட்டோர் கண்டுரசித்துள்ளனர்.
சமீபத்தில் சூப்பர் ஸ்டாரின் "தர்பார்" படத்திலிருந்து வெளியான "சும்மா கிழி" பாடம் 2 மணி நேரத்தில் 2 மில்லியன் வியூஸ்களை பெற்றது. அதேபோல காலை முதல் ட்ரெண்டிங்கில் இருந்த "எனை நோக்கி பாயும் தோட்டா" ஹேஷ்டேக்குகளை எல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு, #HeroSecondSingle #HeroTitleTrack ஆகிய ஹேஷ்டேக்குகள் இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.