கனவு நிறைவேறியது... சூப்பர் ஸ்டாருடன் நான்... நடிகர் சூரியின் உருக்கமான வீடியோ பதிவு...!

Published : Nov 29, 2019, 06:28 PM IST
கனவு நிறைவேறியது... சூப்பர் ஸ்டாருடன் நான்... நடிகர் சூரியின் உருக்கமான வீடியோ பதிவு...!

சுருக்கம்

இந்தப்படம் மூலம் முதன் முறையாக காமெடி நடிகர் பரோட்டா சூரி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்க உள்ளார். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியான நிலையில், சந்தோஷத்தின் உச்சத்தில் உள்ளார் சூரி. 

"பேட்ட" படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள "தர்பார்" படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துவிட்டது. தற்போது போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் அடுத்த படத்திற்கு "தலைவர் 168" என தற்காலிக தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் அந்த படத்தை, சிறுத்தை சிவா இயக்க உள்ளார். 

எந்திரன், பேட்ட படங்களைத் தொடர்ந்து 3வது முறையாக சன் பிக்சர்ஸ் உடன் ரஜினி கைகோர்த்துள்ளதால், ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். இப்படத்திற்கு டி.இமான் இசையமைப்பதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இந்தப்படம் மூலம் முதன் முறையாக காமெடி நடிகர் பரோட்டா சூரி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்க உள்ளார். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியான நிலையில், சந்தோஷத்தின் உச்சத்தில் உள்ளார் சூரி. 

இந்த மகிழ்ச்சியான தருணம் குறித்து சன்பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள வீடியோவில் பகிர்ந்துள்ளார். என்ன்னோட மிகப்பெரிய கனவு நிறைவேறியிருக்கு. தலைவர் கூட செல்ஃபி எடுத்தாலே அவ்வளவு சந்தோஷமா இருக்கும். ஆனா இப்போ அவர் கூட படம் முழுவதும் சேர்ந்து நடிக்க மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. சந்தோஷத்தின் உச்சத்தில் இருக்கேன். இப்படி ஒரு வாய்ப்பு கொடுத்த சூப்பர் ஸ்டாருக்கு நன்றி. அடுத்தடுத்து சன்பிக்சர்ஸ் பேனரில் இரண்டு படம் நடிக்கிறது ரொம்ப சந்தோஷமா இருக்கு, சிவா அண்ணா கூட இரண்டாவது முறையாக நடிக்கிறேன் அவங்களுக்கும் நன்றி என உணர்ச்சிப்பூர்வமாக பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

என்னுடைய மகனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பா? கொந்தளித்த கோமதி: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்!
நடிகை தாக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் விய்யூர் சிறைக்கு மாற்றம்; நடிகர் திலீப் விடுதலை!