தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் உங்கள் அன்பின் முன்னே... தந்தை குறித்து சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி

Published : Jun 27, 2023, 05:49 PM ISTUpdated : Jun 27, 2023, 06:02 PM IST
தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் உங்கள் அன்பின் முன்னே... தந்தை குறித்து சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி

சுருக்கம்

நடிகர் சிவகார்த்திகேயன் தனது தந்தையின் 70வது பிறந்தநாளான இன்று, அவர் குறித்து நெகிழ்ச்சியுடன் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

நடிகர் சிவகா்த்திகேயனின் தந்தை தாஸ் போலீஸ் ஆக இருந்தவர். மறைந்த அவரது தந்தையின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று நடிகர் சிவகார்த்திகேயன் தன் தந்தை சிறையில் பணியாற்றிய போது கைதிகளை எப்படி நல்வழிப்படுத்தினார் என்பதற்கு எடுத்துக்காட்டாக ஒரு சம்பவத்தை தன்னுடைய வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் ஆக வைத்துள்ளார்.

அதில், நடிகர் சிவகார்த்திகேயன் அப்பா என்று சொல்வதை விட, ஜி. தாஸ் அவர்களின் மகன் சிவகார்த்திகேயன் என்று சொல்வது தான் பேரழகு மேல புகைப்படத்தில் இருக்கும் நபர் டைரி நிகழ்ச்சியில், என்னிடம் அவரின் கதைகளை கதைத்தார். 

அந்த நபர் என்னிடம் சொல்லிய பெயர் ஜி.தாஸ். கோயம்பத்தூர் மத்திய சிறைச்சாலையில் ஜி.தாஸ் அவர்கள் சுப்ரெண்ட்டாக பணிபுரிந்த பொழுது, சிறைவாசிகள் மனதில் தேசிய கீதமாய் திகழ்ந்தார் என்னிடம் கதை சொன்ன நபர் கோவத்தினால் ஒரு செயலை செய்து, சிறைவாசத்தை அனுபவித்தார். சிறைக்கு அவர் செல்லும் பொழுது, படிப்பு வாசம் அவரிடம் இல்லை, ஆனால் விடுதலை ஆன பிறகு அந்த நபர் வெளியில் வரும் பொழுது, முதுகலை பட்டம் பெற்றிதிருந்தார், 

இதையும் படியுங்கள்... கேப்டன் மில்லர்' ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு

அதற்கு காரணம் ஜி.தாஸ் அவர்கள். சிறைப்பறவைகளை என்றும் அடிக்க கூடாது, சிறைப்பறவைகளுக்கு நல்ல உணவும் நீரும் கொடுக்க வேண்டும், சிறைப்பறவைகளுக்கு கல்வியை புகுத்த வேண்டும், இவை அனைத்தையும் செய்தார் ஜி.தாஸ். 

எல்லா தவறுகளுக்கும் இங்கு மன்னிப்புண்டு, அந்த மன்னிப்போடும் அன்பையும், கருணையும் அள்ளி அள்ளி கொடுத்தார். ஜி.தாஸ். கர்நாடக மாநிலம் நமக்கு தண்ணீர் கொடுக்கவில்லை என்பதற்காக, சிறைச்சிட்டுகள் அனைவரும் உண்ணாவிரதம் போராட்டம் நடத்தினார்கள். சிறைச்சிட்டுகளின் செயலை பார்த்து அவர்களை பாராட்டி, அன்றிரவு சிறைச்சிட்டுகளுக்கு பிரியாணி உணவை கொடுத்து மகிந்தவர். 

இதில் முக்கியமான விசயம் என்னவென்றால் சிறையில் இருக்கும் நபர்களின் குடும்பத்தில், ஏதேனும் கஷ்டம், கல்விக்கு பணம் வேண்டும், மருத்துவ செலவு வந்தால், ஜி. தாஸ் அவர்கள் அந்த குடும்பத்திற்கு தன்னுடைய சொந்த பணத்தை கொடுத்து உதவுவர். இதற்கு சாட்சி அந்தியூர் அன்புராஜ் அண்ணா. மனித மனங்களை கொண்டாடுவோம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

இறுதியாக, அப்பா... தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் உங்கள் முன்னே. இன்று நான் என்னவெல்லாம் செய்கிறேனோ அதற்கு காரணம் நீங்கள் தான் அப்பா. எப்போதும் பெருமைக்குரிய மகனாக உங்களை நினைவில் வைத்திருப்பேன் என நெகிழ்ச்சி உடன் குறிப்பிட்டுள்ளார் சிவகார்த்திகேயன்.

இதையும் படியுங்கள்... அசின் முதல் காஜல் அகர்வால் வரை - தொழிலதிபர்களை மணந்த டாப் தமிழ் நடிகைகள்

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

பாகிஸ்தானைப்போல துரோகிகள் அல்ல..! 1 சொட்டு தண்ணீருக்கு 100 ஆண்டு விசுவாசமாக இருப்போம்..! ரன்வீர் சிங்கால் பலூச் மக்கள் வேதனை..!
2025-ஆம் ஆண்டு லோ பட்ஜெட்டில் உருவாகி... மிகப்பெரிய வசூலை வாரி சுருட்டிய டாப் 5 படங்கள்!