
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது இங்கிலாந்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நேற்றைய தினம், பல்வேரு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், இந்தியா - பாகிஸ்தான் அணி மோதிய உலக கோப்பை ஒரு நாள் போட்டி நடைபெற்றது.
இந்திய அணி மற்றும் பாகிஸ்தான் அணி விளையாடுவதை பார்க்க, பல கிரிக்கெட் ரசிகர்கள், இங்கிலாந்து சென்றனர். மேலும் பல பாலிவுட், கோலிவுட் பிரபலங்களும், இந்திய அணியின் விளையாட்டை நேரில் பார்ப்பதற்காக இங்கிலாந்து பறந்தனர்.
குறிப்பாக, நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் அனிருத், ஆகியோர், இங்கிலாந்திற்கு நேரடியாக சென்று, இந்திய அணியின் ஜெர்சி அணிந்தவாறு போட்டியை கண்டு ரசித்தனர். இந்த மகிழ்ச்சியை புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களுக்கு தெரிவித்தனர்.
நேற்றைய தினம் நடைபெற்ற பாகிஸ்தான் - இந்திய அணி மோதிய போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.