இன்னும் எத்தனை தடவைதான் மணிரத்னத்துக்கு மாரடைப்பு வரணும் பாஸ்...ராங் நியூஸ்...

By Muthurama LingamFirst Published Jun 17, 2019, 9:59 AM IST
Highlights

தமிழ்சினிமாவின் நட்சத்திர இயக்குநர் மணிரத்னம் மாரடைப்பு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மிக வேகமாகப் பரவி வரும் செய்திகளை இயக்குநரது குடும்ப வட்டாரங்கள் மறுக்கின்றன.
 

தமிழ்சினிமாவின் நட்சத்திர இயக்குநர் மணிரத்னம் மாரடைப்பு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மிக வேகமாகப் பரவி வரும் செய்திகளை இயக்குநரது குடும்ப வட்டாரங்கள் மறுக்கின்றன.

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக இருப்பவர் மணிரத்னம். ‘இதய கோவில்’, ‘இருவர்’, ‘மவுனராகம்’, ‘தளபதி’, ‘அலைபாயுதே’, ‘ரோஜா’, ‘பம்பாய்’, ‘அஞ்சலி’, ‘அக்னி நட்சத்திரம்’, ‘கன்னத்தில் முத்தமிட்டால்’, ‘நாயகன்’ உள்பட பல வெற்றி படங்களை இயக்கி உள்ளார். ஏ.ஆர்.ரகுமானை ‘ரோஜா’ படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தியவர் மணிரத்னம் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் இயக்கத்தில் கடந்த வருடம் ‘செக்க சிவந்த வானம்’ படம் திரைக்கு வந்தது. தற்போது கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளார். இதற்கான நடிகர்-நடிகை தேர்வில் ஈடுபட்டு வருகிறார். விரைவில் படப்பிடிப்பை தொடங்கவும் திட்டமிட்டு உள்ளார்.

இந்த நிலையில் மணிரத்னத்துக்கு நேற்று திடீரென்று மாரடைப்பு  ஏற்பட்டது என்றும் உடனடியாக அவர் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார் என்றும் காட்டுத்தீயாக செய்தி பரவியது.இந்த தகவல் பட உலகிலும், சமூக வலைத்தளத்திலும் பரவி ரசிகர்களும், திரையுலகினரும் நலம் விசாரித்த வண்ணம் இருந்தனர்.

இது குறித்து மணிரத்னத்தின் மக்கள் தொடர்பாளரை விசாரித்தபோது, சிறு வயிற்றுக்கோளாறு [அசிடிட்டி] காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு செக் அப் முடிந்து உடனே வீடு திரும்பிவிட்டதாக, வீணான வதந்திகளைப் பரப்பவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார். மணிரத்னம் ஏற்கனவே மூன்று முறை மாரடைப்பை சந்தித்தவர் என்பதால் இனி மாரடைப்பு செய்திகளுக்கு விடை கொடுப்பது நல்லது.

click me!