
தென்னிந்திய நடிகர் சங்க அறக்கட்டளை குழு உறுப்பினர் பூச்சி எஸ். முருகன் கொரோனா ஊரடங்கால் பணி இன்றி தவிக்கும் நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு முன்னணி நடிக, நடிகைகள் உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததோடு அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். தனது சொந்த செலவில் 300க்கும் மேற்பட்ட உறுப்பினர்களுக்கு அரிசி, காய்கறி உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கி வருகிறார்.
அதையடுத்து நடிகை ஜெயசித்ரா 200க்கு மேற்பட்ட நடிகர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். இந்நிலையில் கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்து வாடும் நடிகர்களுக்கு உதவும் வகையில் நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு லட்சமும் ரூபாயும், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ரூ.50 ஆயிரமும், நடிகை லதா ரூ.25 ஆயிரமும் , நடிகர் விக்னேஷ் ரூ.10 ஆயிரமும் வழங்கியுள்ளனர்.
இவை அனைத்தும் நேரடியாக நடிகர் சங்க வங்கிக் கணக்கில் சேர்க்கப்பட்டது. மேலும் தமிழகம் முழுக்க இருக்கும் நாடக நடிகர்களுக்கு உதவும் வகையில் அந்தந்த பகுதி பிரமுகர்களைக் கொண்டு உதவவும் பூச்சி முருகன் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக மதுரை நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு பைக்கரா பி.சசிதேவா அவர்கள் 150க்கு மேற்பட்ட உறுப்பினர்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.