
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கங்கனா ரணாவத். தமிழில் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை பிரதிபலிக்கும் தலைவி என்ற படத்தில் கங்கனா நடித்து முடித்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் 23ம் தேதி படம் வெளியியாகியிருக்க வேண்டிய நிலையில், கொரோனா பிரச்சனை காரணமாக வெளியீட்டு தேதி ஒத்திவைக்கப்பட்டது.
சமீபத்தில் ட்விட்டரில் தொடர்ந்து சர்ச்சையான கருத்துக்களை பதிவிட்டு வந்ததால் ட்விட்டர் நிர்வாகம் அவருடைய கணக்கை முடக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் கங்கனா ரணாவத்தின் பாதுகாவலர் பாலியல் புகாரில் சிக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கங்கனா ரணாவத்தின் பாதுகாவலரான குமார் ஹெக்டே என்பவர் மீது மும்பையில் உள்ள டி.என்.நகர் காவல் நிலையத்தில் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். அதில் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் குமார் ஹெக்டே வாக்குறுதி அளித்ததாகவும், அதைப் பயன்படுத்தி தன்னை பலமுறை வலுக்கட்டயமாக பாலியல் உறவு கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கடந்த ஏப்ரல் மாதம் 27ம் தேதி என் வீட்டில் இருந்த ரூ. 50 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்றதாகவும் அவர் மீது புகார் அளித்துள்ளார். இதையடுத்து மும்பை போலீசார் குமார் ஹெக்டே மீது 376, 377 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். குமார் ஹெக்டே அந்த பெண்ணுடன் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்ததாகவும், தற்போது இருவரும் பிரிந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.