
நடிகர் சிவகார்த்திகேயன் முதல் முறையாக தயாரிப்பாளராக அறிமுகமான திரைப்படம் 'கனா'. இந்த படத்தை நடிகராகவும், பாடகராகவும் அனைவராலும் அறியப்பட்ட அருண்ராஜா காமராஜ் இயக்கி இருந்தார். நடிகை ஐஸ்வர்யா ராஜேஷை வைத்து பெண்கள் கிரிக்கெட்டை மையப்படுத்தி படம் உருவாக்கப்பட்டது.
இந்த படத்தின் மற்றொரு தனி சிறப்பு, இதில் நடிகர் சிவகார்த்திகேயன் மகள் ஆராதனா , 'வாயாடி பெத்த புள்ள' என்று தொடங்கும் பாடலை சிவாவுடன் இணைந்து பாடியிருந்தார்.
'கனா' படம் வெளியாகும் முன்பே வெளியான இந்த பாடலின் லிரிக்கள் வீடியோ இரண்டே நாட்களில் 5 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது. அதே போல் 'கனா' திரைப்படமும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் நடித்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுக்கு சிறந்த நடிகை என்கிற பெயரை பெற்று தந்தது.
இந்நிலையில் ஆராதனா பாடிய 'வாயாடி பெத்த புள்ள' பாடல் புதிய சதையை படைத்துள்ளது. இந்த பாடல் சமூக வலைத்தளத்தில் இதுவரை 100 மில்லியன் பார்வையாளர்களால் பார்த்து ரசிக்கப்பட்டு சாதனை செய்துள்ளது இதனை படக்குழுவினர் கொண்டாடி வருகிறார்கள்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.