
புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, இந்திய விமானப் படை, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலின்போது இந்தியப் போர் விமான படை விமானி அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்தினம் சிக்கினார்.
இவர் மார்ச் 1 ஆம் தேதி பாகிஸ்தான் ராணுவத்திடம் இருந்து விடுவிக்கப்பட்டு இந்தியா கொண்டுவரப்பட்டார். இவர்க்கு இந்திய மக்கள் நாட்டில் எல்லையில் இருந்து அமோக வரவேற்பு கொடுத்தனர்.
மேலும் இந்திய மக்கள் மத்தியில் அபிநந்தனுக்கு மிகப்பெரிய வரவேற்பு ஏற்பட்டுள்ளது. பலர் இவரை தங்களுடைய ரோல் மாடலாக கருதுவதாக சமூக வலைத்தளத்தில் வெளிப்படையாக கூறி வருகிறார்கள்.
இந்நிலையில், பிரபல பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தா, இந்திய வீரர் அபிநந்தனின் திறமையை பார்த்து, அமெரிக்கா அதிர்ந்து போய் உள்ளதாக கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் போட்டுள்ள ட்விட்டர் பதிவில்," 65 ஆண்டுகள் பழமையான ரஷ்ய விமானம் மிக்-21 . அமெரிக்காவில் தயாரித்து விற்பனை செய்யப்பட்ட எஃப்16ஐ வீழ்த்திவிட்டதா என்று அமெரிக்க மக்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.
இதன் மூலம் இந்திய விமானியின் பயிற்சி குறித்தும், அவருடைய திறமை குறித்தும் தெரிகிறது. சிறந்த விமானி இயக்கும் விமானமே சிறந்த விமானம் என்று அவர் ட்வீட் போட்டுள்ளார்". இந்த பதிவு வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.