
’இந்தியில் என் சுயசரிதையாக நான் இயக்கும் படத்தில் பாலிவுட்டில் எனக்கு தனிப்பட்ட முறையில் நடந்த அந்தரங்க சமாச்சாரங்களைப் பற்றியோ தனிமனிதர்களைப் பற்றி அவதூறான காட்சிகளோ கண்டிப்பாக இருக்காது’ என்கிறார் மணிகர்னிகா’ நாயகி கங்கனா ரனாவத்.
இந்தியில் வசூலில் சக்கைப் போடுபோட்ட ‘மணிகர்னிகா’ படத்தின் கதாநாயகியும் இயக்குநருமான கங்கனா ரனாவத் அடுத்து தனது சொந்தக் கதையைத் தானே இயக்கி,தயாரித்து, நடிக்கவிருக்கிறார். இப்படத்துக்காக கதை, திரைக்கதையை இந்திய சினிமாவின் டாப் டென் இயக்குநர்களில் ஒருவரான எஸ்.எஸ். ராஜமவுலியின் தந்தை எழுதுகிறார்.
இப்படம் தொடர்பான கதைவிவாதமும் நட்சத்திர தேடலும் சூடுபிடித்துள்ள நிலையில் பாலிவுட் முழுக்கவே கங்கனா தனது சுயசரிதையின் பல நடிகர்கள் மற்றும் இயக்குநர்களை தோலுரிக்கப்போகிறார், மற்றவர்கள் ‘மி டு’வை அறிக்கையாகக் கொடுத்துக்கொண்டிருக்க அதை இவர் படமாகவே எடுக்கவிருக்கிறார் என்கிற பரபரப்பு செய்திகள் நடமாடி வந்தன.
இந்நிலையில் அந்த வதந்திகளுக்கு மறுப்பு தெரிவித்திருக்கும் கங்கனா, ‘ஒரு நடிகையாக எல்லோரும் சந்தித்த கசப்பான சில விஷயங்களைக் கடந்துதான் நானும் இந்த நிலைமைக்கு வந்திருக்கிறேன். ஆனால் அதை எனது கதையில் சொல்லி போரடிக்க விரும்பவில்லை. எனது வெற்றியில் பல லட்சக்கணக்கான ரசிகர்களின் நேசம் வழிமுழுக்க இருக்கிறது. அந்த நேசத்தைப் பிடித்துக்கொண்டு நான் இந்த உயரத்துக்குப் பயணித்த கதையை மட்டுமே எனது சுயசரிதையில் பேச விரும்புகிறேன்’ என்கிறார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.