100 நாட்களை கடந்து வெள்ளி விழா கண்ட சிவாஜி கணேசனின் கிளாசிக் ஹிட் படங்களின் தொகுப்பு இதோ...

By Kanmani PFirst Published Oct 1, 2022, 1:36 PM IST
Highlights

நடிப்பின் உலகம் என்றால் அது நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தான். கடவுள் சிவன் முதல் சுதந்திரப் போராட்ட வீரர் கட்டபொம்மன் வரை நம் நினைவிற்கு வரும் முகம் அது சிவாஜியின் முகம் தான். மூன்று தலைமுறை கடந்து ரசிகர்களை தன் வசம் ஈர்த்திருந்த சிவாஜி கணேசன் அவர்களின் பிறந்த நாள் இன்று நடிகர் திலகத்தின் பிறந்த நாளை முன்னிட்டு அவரின் சிறந்த படங்களின் சில தொகுப்புகளை இங்கு பார்க்கலாம்.

நடிப்பின் உலகம் என்றால் அது நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தான். கடவுள் சிவன் முதல் சுதந்திரப் போராட்ட வீரர் கட்டபொம்மன் வரை நம் நினைவிற்கு வரும் முகம் அது சிவாஜியின் முகம் தான். மூன்று தலைமுறை கடந்து ரசிகர்களை தன் வசம் ஈர்த்திருந்த சிவாஜி கணேசன் அவர்களின் பிறந்த நாள் இன்று நடிகர் திலகத்தின் பிறந்த நாளை முன்னிட்டு அவரின் சிறந்த படங்களின் சில தொகுப்புகளை இங்கு பார்க்கலாம்.

சிவாஜி அவர்கள் அறிமுகமான பராசக்தி பாவலர் பாலசுந்தரம் எழுதிய பராசக்தி, நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாகி இருந்தது. அதற்கான வசனத்தை முன்னாள் முதலமைச்சர் மு கருணாநிதி அவர்கள் எழுதியிருந்தார். கிருஷ்ணன்-பஞ்சு என இருவர் இயக்கி இருந்த பராசக்தி படம் அன்றைய காலகட்டத்தில் 175 நாட்களுக்கு மேல் திரையரங்கில் ஓடி வணிக ரீதியாக வெற்றிப்படமாக அமைந்தது.

1953 ஆம் ஆண்டு வெளியாகியிருந்த திரும்பிப் பார் என்கிற படத்தை டி ஆர் சுந்தரம் இயக்கியும் தயாரித்தும் இருந்தார் இதற்கும் கருணாநிதி அவர்கள் தான் வசனம் எழுதியிருந்தார். சிவாஜி கணேசன் நெகட்டிவ் ரோலில் நடித்திருந்த இந்த படமும் வசூல் ரீதியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. ஆனால் இந்திய தேசிய காங்கிரஸ் குறித்த நையாண்டி வசனங்கள் எழுதப்பட்டிருந்ததாக விமர்சனங்களும் இருந்தது. 

புராண நூல்களில் இளைய தலைமுறையை  அதிகமாக தன்வசம் ஈர்த்தது தான் தெனாலிராமன். இந்த படத்தில் தெனாலி வேடத்தில் வந்து ரசிகர்களை மகிழ்வித்து இருந்தார் சிவாஜி கணேசன். அப்போதே இந்தப் படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் படமாக்கப்பட்டிருந்தது. இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

வரலாற்று அதிரடி திரைப்படமாக 1958 ஆம் ஆண்டு வெளியான உத்தமபுத்திரன் படம் ரசிகர்களை வெகுவாகவே கவர்ந்திருந்தது. வரலாற்று அதிரடி திரைப்படமாக அமைந்த இதனை ஸ்ரீ பிரகாஷ் ராவ் என்பவர் இயக்க சிவாஜி கணேசன், பத்மினி இருவரும் ஜோடி போட்டிருந்தனர். இந்த படம் நூறு நாட்களைக் கடந்து ரசிகர்களின் ஆதரவை பெற்றிருந்தது.

மற்றும் ஒரு வரலாற்று நாயகனின் கதை தான் வீரபாண்டிய கட்டபொம்மன். வீரபாண்டிய கட்டபொம்மன் என்றால் நம் நினைவுக்கு வருவது சிவாஜி கணேசன் அவர்களின் முகம் தான். அந்த அளவிற்கு தனது நடிப்பால் கட்டபொம்மனை நம் கண் முன்னே நிறுத்தி இருப்பார். இந்தப் படம் திரையரங்குகளில் 25 வாரங்களுக்கு மேல் ஓடி வெள்ளி விழா படமாக மாறியது.

1960 ஆம் ஆண்டு வெளிவந்த இரும்புத்திரை படத்தில் சிவாஜி கணேசன் வைஜெயந்தி மாலா, கே ஏ தங்கவேலு, சரோஜாதேவி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். சகோதரர்களான மாணிக்கம் மற்றும் கொண்ட முத்து அவர்கள் இடையான உறவு குறித்த படமாக இது இருந்தது. இந்தப் படமும் 125 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி சாதனை படைத்தது.

கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் 1960 ஆம் ஆண்டு வெளியான படம் தெய்வப் பிறவி. இந்த படம் எட்டாவது தேசிய திரைப்பட விருதுகளை வென்றது. மூன்றாவது சிறந்த திரைப்படமாக அகில இந்திய சான்றிதழை பெற்றது. தெய்வப்பிறவி இந்த படம் ஹிந்தி, சிங்களம் உள்ளிட்ட பலமொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. இதுவும் 100 நாட்களுக்கு மேல் திரையரங்குகளை கண்டது.

படிக்காத மேதை பலரின் ஆதங்கத்தையும் கொட்டி தீர்த்த படம் கிராமத்து இளைஞனாக சிவாஜிகணேசன் தோன்றி, முழு நடிப்பையும் வெளிப்படுத்தி இருப்பார் .இந்த படமும் பலமொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் அடித்தன.

அண்ணன் தங்கையின் பாசத்தை அழகாக எடுத்துச் சொன்ன படம் தான் பாசமலர். சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், சாவித்திரி கணேசன் என நட்சத்திரங்கள் கூடி இருந்த இந்த படம் அண்ணன் தங்கைகளின் கீதங்களாகவே இருந்து வருகிறது. சகோதர பாசத்தை எடுத்துரைத்த இந்த படம் 26 வாரங்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி இருந்தது. இதனை ஏ பீம்சிங் என்பவர் இயக்கி இருந்தார்.

 கல்வியா செல்வமா வீரமாய் என ரசிகர்களை கவர்ந்த சரஸ்வதி சபதம் படமும் 100 நாட்களைக் கடந்து திரையரங்குகளில் ஓடி இருந்தது

எண்பதுகளின் பிற்பகுதிகள் சிவாஜி கணேசன் நடித்த முதல் மரியாதை படம் இன்றளவும் பிரபலம் வயதான பின்  மனதில் எழும் காதல் குறித்தான கதைக்களத்தை இந்த படம் கொண்டிருந்தது. காதலுக்கு வயதில்லை என்னும் கருத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்த முதல் மரியாதை ரசிகர்களிடம் பேராதரவை பெற்றதோடு இருநூறு நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி வெள்ளி விழாவை பெற்றது. அதோடு 33 வது தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த பாடலாசிரியர் விருதையும், சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான விருதையும் இந்த படம் தட்டிச் சென்றது. இதனை பாரதிராஜா இயக்கியிருந்தார்.

click me!