
தனுஷ் ரசிகர்களின் பேராவலுக்கு இடையே வட சென்னை திரைப்படம் நாளை திரைக்குவர இருக்கிறது. வெற்றி மாறன் மற்றும் தனுஷின் வெற்றிக்கூட்டணியில் உருவாகி இருக்கும் மூன்றாவது திரைப்படம் இது என்பதாலும், புதுப்பேட்டை படத்தின் சாயல் இதில் இருக்கும் என்பதாலும் இந்த படத்திற்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவிலான எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
இந்த படத்தில் கதை மிகவும் ஆழமானது என்பதால் இதனை மூன்று பாகங்களாக எடுக்கும் திட்டத்தில் இருக்கும் வெற்றி மாறன், வடசென்னை படத்திற்கு கிடைக்கும் ரெஸ்பான்ஸை வைத்து தான் அடுத்த கட்டத்திற்கு செல்ல இருப்பதாக முன்னரே தெரிவித்திருக்கிறார்.
பொதுவாகவே ஒரு படம் ரிலீசாகுவதற்கு முன்னதாகவே அதன் கதை என்ன என்பது குறித்து ஓரளவிற்கு சில தகவல்கள் வெளியாகிவிடும். அந்த வகையில் வட சென்னை படம் ஒரு சாதாரண இளைஞனின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களால் அவர் எப்படி டானாகிறார், அதை தொடர்ந்து என்ன விளைவுகள் ஏற்படுகிறது என்பது தான் கதையின் மையம் என்று முன்னரே தகவல்கள் வெளியாகி இருந்தன.நடிகர் சித்தார்த்தும் சமீபத்தில் வட சென்னை படத்தினை குறித்து ஒரு டிவிட்டர் பதிவினை வெளியிட்டிருக்கிறார்.
அதில் வடசென்னை படத்தின் கதையும், தான் நடித்த ஸ்ட்ரைக்கர் படத்தின் கதையும் கிட்டத்தட்ட ஒன்று தான் என தெரிவித்திருக்கிறார்.
ஸ்ட்ரைக்கர் படத்தில் கேரம் போர்ட் விளையாட்டில் சாதிக்க விரும்பும் ஒரு இளைஞன், எப்படி டானாகிறான் என்பது தான் கதை. வட சென்னை படத்திலும் தனுஷ் கேரம் விளையாட்டில் ஆர்வம் உள்ளவராக தான் நடித்திருக்கிறார். வெற்றிமாறன் இந்த கதையை இன்னும் நன்றாக செய்திருப்பார் என்பதால், அவர் இயக்கத்தில் வடசென்னை படத்தை காண மிகவும் ஆர்வமுடன் இருக்கிறேன் என சித்தார்த் அந்த ட்வீட்டில் தெரிவித்திருக்கிறார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.