சின்மயி மூஞ்சில் கரியை பூசிக்கொள்ளும் வேலை இது! METOO -க்கு எதிராக கருத்து தெரிவித்த நடிகை அம்மு!

Published : Oct 16, 2018, 03:58 PM IST
சின்மயி மூஞ்சில் கரியை பூசிக்கொள்ளும் வேலை இது! METOO -க்கு எதிராக கருத்து தெரிவித்த நடிகை அம்மு!

சுருக்கம்

பாலியல் ரீதியா தங்களுக்கு நேர்ந்த பிரச்சனைகள் குறித்து பிரபலங்கள் பகிர்ந்து வரும் ME TOO ஹேஷ் டேகில், வைரமுத்துவுக்கு எதிராக சின்மயி வைத்த குற்றச்சாட்டு தற்போது கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்கிறது. இதில் சின்மயிக்கு ஆதரவாக சிலர் குரல் எழுப்பினாலும், சின்மயிக்கு எதிரான கருத்துக்களும் வந்து கொண்டுதான் இருக்கின்றன.   

எந்த விதா ஆதாரமும் இல்லாமல் அதுவும் , இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு இப்படி ஒரு சம்பவத்தை அம்பலப்படுத்துவது ஏன்?
முறையாக புகார் கொடுக்காதது ஏன்? என பலவிதமான கேள்விகளுக்கு தற்போது ஆளாகி இருக்கிறார் சின்மயி. 

இந்நிலையில் இந்த ME TOO இயக்கம் குறித்து சமீபத்தில் பேசிய சின்னத்திரை நடிகை அம்மு, இந்த விஷயத்தினை கடுமையாக சாடி இருக்கிறார். இந்த ME TOO இயக்கம் தேவை இல்லாத ஒன்று. தங்கள் முகத்தில் தானே கரியை பூசிக்கொள்ளும் விஷயம் தான் இது.

இதில் சம்பந்தப்பட்ட இருவருக்குமே வாழ்க்கை நன்றாக போய்க்கொண்டிருக்கும் போது இப்போது தேவை இல்லாமல் இந்த விஷயத்தை மீண்டும் ஆரம்பிப்பது ஏன்? இதெல்லாம் ஒரு விழிப்புணர்வா? எனக்கு இது போன்ற நடவடிக்கைகளில் எல்லாம் நம்பிக்கை இல்லை. ஒரு பிரபலம் என்பதால் வைரமுத்து மீது இப்போது குற்றம்சாட்டி இருக்கின்றனர்.

இதுவே ஒரு சாதாரண நபராக இருந்தால் இப்படி செய்திருப்பார்களா? இப்போது இருக்கும் எல்லோருக்குமே உண்மை என்ன என்பது நன்றாக தெரியும். இதனால் மற்றவர்களின் வாழ்க்கையில் இது போல கருப்பு புள்ளி வைப்பது தேவை இல்லாத வேலை என காட்டமாக தெரிவித்திருக்கிறார் அம்மு. இந்த ME TOO விவகாரத்தில் இப்போதெல்லாம் சின்மயிக்கு ஆதரவாக பேசுபவர்களை விட, எதிராக பேசுபவர்கள் தான் அதிகம் எனும்படியாக நிலமை இருக்கிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கம்பீரமாக எண்ட்ரி கொடுத்த பாஸ் கார்த்திக்- சூடுபிடிக்க தொடங்கிய கார்த்திகை தீபம்; கொண்டாடும் ஃபேன்ஸ்!
ஜன நாயகன் லேட்டஸ்ட் அப்டேட்: மீண்டும் ஒரு மெர்சல் மேஜிக்? இரண்டு கெட்டப்பில் மிரட்டப்போகும் விஜய்?