கொரோனாவில் இருந்து குணமடைந்த மறைந்த இளம் நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவின் சகோதரர் துருவ்!

By manimegalai aFirst Published Jul 24, 2020, 7:37 PM IST
Highlights

பிரபல நடிகர் அருஜுனின் மருமகனும், சமீபத்தில் மாரடைப்பால் காலமான சிரஞ்சீவி சர்ஜாவின் சகோதர துருவுக்கும், அவருடைய மனைவிக்கும் கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில், அவர்கள் நல்லபடியாக கொரோனாவில் இருந்து குணமடைந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
 

பிரபல நடிகர் அருஜுனின் மருமகனும், சமீபத்தில் மாரடைப்பால் காலமான சிரஞ்சீவி சர்ஜாவின் சகோதர துருவுக்கும், அவருடைய மனைவிக்கும் கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில், அவர்கள் நல்லபடியாக கொரோனாவில் இருந்து குணமடைந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

பிரபல கன்னட நடிகரும், ஆக்‌ஷன் சிங் அர்ஜுனின் சகோதரி மகனுமான சிரஞ்சீவி சார்ஜா மாரடைப்பால் கடந்த 7ம் தேதி மாரடைப்பால் மரணமடைந்தார். 39 வயதே ஆன நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவின் திடீர் மரணம் கன்னட திரையுலகை மட்டுமல்லாது ஒட்டுமொத்த திரைப்பிரபலங்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சிரஞ்சீவி சார்ஜாவை 10 ஆண்டுகளாக காதலித்து மணமுடித்த நடிகை மேக்னா ராஜ் தற்போது 4 மாத கர்ப்பிணியாக உள்ளார். கர்ப்பிணியான மேக்னா ராஜ் கணவர் உடலின் மீது படுத்து கதறி அழுததை யாராலும் மறந்திருக்க முடியாது.

சிரஞ்சீவி சார்ஜா இறந்து ஒரு மாதம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து கடந்த 7ம் தேதி அவரது குடும்பத்தினர் பிரார்த்தனை கூட்டம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தனர். அதை பார்க்கும் போது ஒரு மாதத்திற்கு பிறகு சிரஞ்சீவி சார்ஜாவின் குடும்பம் மெல்ல இயல்பு நிலைக்கு திரும்புவதை நினைத்து ரசிகர்கள் சற்றே ஆறுதல் அடைந்தனர். இந்நிலையில் சிரஞ்சீவி சார்ஜாவின் தம்பியான துருவா சார்ஜாவிற்கும், அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 

2012ம் ஆண்டு வெளியான அதூரி என்ற படம் மூலம் அண்ணனைப் போலவே ஹீரோவாக அறிமுகமானார் துருவா சார்ஜா. அதன் பின்னர் 2018ம் ஆண்டு தனது நீண்ட நாள் தோழியான பிரேரானா என்பவரை கரம் பிடித்தார். இந்நிலையில் தனக்கும் தனது மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவரே தெரிவித்துள்ளார். மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுவதாக தெரிவித்துள்ளார்.  இந்த செய்தி துருவா மற்றும் சிரஞ்சீவி சார்ஜா ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

இதை தொடர்ந்து துருவ் சார்ஜா, கொரோனா நெகடிவ் என வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். அனைவருடைய பிரார்த்தனையும், சகோதரரின் அருளும் தான் தன்னை கொரோனாவில் இருந்து மீட்டு கொண்டு வந்ததாகவும், தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கு நன்றிகளையும் துருவ் தெரிவித்துள்ளார்.
 

click me!