
தமிழ் சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என்றால் திறமை இருந்தால் போதும் என்பது பலரது நம்பிக்கையாக இருக்கிறது. ஆனால் திறமை மட்டுமே போதாது என்பதை நிஜமாக்கியுள்ளது பிரபல பாடகர் சுந்தர் ஐயரின் வாழ்க்கை.
மிக உயரிய விருதுகளில் ஒன்றாக கருதப்படும், தேசிய விருதை பெற்றும், வாரத்திற்கு 5 படங்களுக்கு மேல் வெளியாகும் நிலையிலும் பாட வாய்ப்பு இல்லாமல் குடும்ப கஷ்டத்தால் அவதி பட்டு வருகிறார் சுந்தர் ஐயர்.
இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'ஜோக்கர்'. இந்த படத்தில் ஜாஸ்மீனு பாடலை பாடியதற்காக தேசிய விருதே சுந்தர் ஐயர் பெற்றார்.
ஜோக்கர் படத்துக்குப் பின் கோபி நய்னாரின் அறம்' படத்தில், புது வரலாறே...' பாடலைப் பாடி, ஒட்டு மொத்த ரசிகர்களில் பாராட்டையும் பெற்றார்.
ஏற்கனவே ஒரு முறை முகநூல் பக்கத்தில், தேசிய விருது பெற்றும், எந்த பின்புலமும் இல்லாததால், பாடுவதற்கு வாய்ப்பு இல்லை என்றும், தனக்கு பாடுவதற்கு வாய்ப்பு கொடுத்தால் போதும் என தெரிவித்தார். இதற்க்கு பலர் இவருக்கு ஆதரவாக குரல் கொடுத்திருந்தனர்.
இந்நிலையில் இவருடைய நிலை பற்றி தற்போது வெளியான தகவல் ரசிகர்களை அதிர்ச்சியாக்கியுள்ளது. அதாவது தனியார் பள்ளியில் படித்து வரும் இவருடைய மகன், மற்றும் மகளுக்கு ஸ்கூல் பீஸ் 1500 ரூபாய் கட்டாததால் ஒரு மாதமாக அவர்கள் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் உள்ளார்களாம்.
பள்ளிக் கட்டணத்தை கட்ட முடியாததால் இவருடைய குழந்தைகளை மற்ற மாணவர்களிடம் இருந்து தனிமைப் படுத்தி வைத்து மற்றும் இன்றி. பின் சுந்தரையரை அழைத்து பள்ளிக் கட்டணம் செலுத்தினால் தான் வகுப்பில் மாணவர்களை அனுமதிப்போம் எனச் சொல்லி இருக்கிறது பள்ளி நிர்வாகம்.
இதனால் ஒருமாதமாக குழந்தைகள் பள்ளிக்கு செல்லமுடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. தற்போது இவர் தனக்கு யாரும் பண உதவிகள் செய்யவேண்டாம் தன்னுடைய திறமைக்கு வாய்ப்பு கொடுங்கள் என ஊடகம் வழியாக கேட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.