‘அந்த கேரக்டருக்கு வேற யாருமே மேட்ச் ஆகமாட்டாங்க’...தமிழ் நாயகியைப் புகழ்ந்து தள்ளும் தெலுங்கு இயக்குநர்...

Published : Mar 16, 2019, 01:59 PM IST
‘அந்த கேரக்டருக்கு வேற யாருமே மேட்ச் ஆகமாட்டாங்க’...தமிழ் நாயகியைப் புகழ்ந்து தள்ளும் தெலுங்கு இயக்குநர்...

சுருக்கம்

‘கனா’ படத்தை தெலுங்கில் ரீமே செய்ய முடிவெடுத்துவிட்டு எந்த தெலுங்கு நடிகையை ஐஸ்வர்யா ராஜேஸ் நடித்த பாத்திரத்தில் நடிக்க வைக்கலாம் என்று ரூம் போட்டு யோசித்தபிறகும் அவரைத் தவிர ஒருவரையும் நினைத்துப்பார்க்கக்கூட முடியவில்லை’ என்கிறார் இயக்குநர் பீமனேனி சீனிவாசராவ்.

‘கனா’ படத்தை தெலுங்கில் ரீமே செய்ய முடிவெடுத்துவிட்டு எந்த தெலுங்கு நடிகையை ஐஸ்வர்யா ராஜேஸ் நடித்த பாத்திரத்தில் நடிக்க வைக்கலாம் என்று ரூம் போட்டு யோசித்தபிறகும் அவரைத் தவிர ஒருவரையும் நினைத்துப்பார்க்கக்கூட முடியவில்லை’ என்கிறார் இயக்குநர் பீமனேனி சீனிவாசராவ்.

‘காக்கா முட்டை’, `தர்மதுரை' படங்களை தொடர்ந்து ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘கனா’ படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. அத்துடன் ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்புக்கும் பாராட்டுக்களும் கிடைத்தது.

அருண்ராஜா காமராஜ் இயக்குநராக அறிமுகமான இந்த படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்திருந்தார். பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து இந்த படம் உருவாகி இருந்தது. வசூலிலும் இந்த படம் சாதனை நிகழ்த்தியது. இதில் கிரிக்கெட் வீராங்கனையாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து இருந்தார். பல மாதங்கள் கிரிக்கெட் விளையாடி பயிற்சிகள் எடுத்து இதில் நடித்தார்.

இந்த நிலையில் கனா படத்தை தெலுங்கில் ‘கவுசல்யா கிருஷ்ணமூர்த்தி கிரிக்கெட்டர்’ என்ற பெயரில் ரீமேக் செய்கின்றனர். இந்த படத்திலும் கிரிக்கெட் வீராங்கனையாக நடிக்க ஐஸ்வர்யா ராஜேசையே தேர்வு செய்துள்ளனர். பீமனேனி சீனிவாசராவ் இந்த படத்தை இயக்குகிறார்.இதில் ராஜேந்திர பிரசாத், வெண்ணிலா கிஷோர் ஆகியோரும் நடிக்கின்றனர். ஏற்கனவே ஐஸ்வர்யா ராஜேஷ் தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிக்கும் படத்திலும், சலீம் இயக்கும் படமொன்றிலும் நடித்து வருகிறார். இது அவருக்கு 3-வது தெலுங்கு படம் என்பது குறிப்பிடத்தக்கது.

ரீமேக்கிலும் ஐஸ்வர்யாவையே தேர்வு செய்தது குறித்துப் பேசிய இயக்குநர் பீமனேனி சீனிவாசராவ்,’’கனா’ படத்தை தெலுங்கில் ரீமே செய்ய முடிவெடுத்துவிட்டு எந்த தெலுங்கு நடிகையை ஐஸ்வர்யா ராஜேஸ் நடித்த பாத்திரத்தில் நடிக்க வைக்கலாம் என்று ரூம் போட்டு யோசித்தபிறகும் அவரைத் தவிர ஒருவரையும் நினைத்துப்பார்க்கக்கூட முடியவில்லை’என்கிறார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!
ஜவ்வா இழுக்கும் இயக்குநர்; ரொம்பவே ஒர்ஸ்ட்; சிறகடிக்க ஆசை சீரியலை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!