
இசை உலகில் , மட்டுமல்லாமல் சினிமா,கர்நாடக சங்கீதத்தில் மிகவும் பரவலாக அறியப்பட்டவர் சுதா ரகுநாதன். இவரது மகள் திருமணம் விரைவில் நடக்கவுள்ளது. இந்நிலையில் அதற்கான அழைப்பிதழ் சமீபத்தில் சமூகவலைதளத்தில் வெளியானது.
அதில் , சுதா ரகுநாதனின் மகள் திருமணம் செய்துகொள்ளப்போகும் நபர் ஒரு வெளிநாட்டுக்காரர். இதனால் பலரும்,சுதா ரகுநாதனுக்கு எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.
கர்நாடக இசைப்பாடகியான சுதா ரகுநாதன் கிருஸ்தவ மதத்திற்கு மாறிவிட்டார் என்றும் அவரை இனிமேல் கோவில்களில் நிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக்கக்கூடாது எனவும் வலியுறுத்தியுள்ளனர். கடந்த 5 நாட்களாகவே, இதுபோன்ற ஏச்சுக்களும், பேச்சுக்களும், சமூக வலைத்தளங்களில் கொட்டிக் கிடக்கின்றன.
அத்துடன் அவது மகள் மாளவிகா திருமணம் செய்துகொள்ளப்போகும், மைக்கேல் என்பவரது நிறத்தையும் குறித்து பலரும் கடுமையான விமர்சனங்களை எழுப்பி வருகின்றனர்.அதே நேரத்தில் சுதா ரகுநானுக்கு ஆதரவாகவும் ஏராளமான குரல்கள் கேட்கத் தொடங்கியுள்ளன.
ஆனால் இது எதைப் பற்றியும் கவலைப்படாமல் சுதா ரகுநாதன் திருமணத்துக்கான வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.
கடந்த 2018ம் ஆண்டில், நித்யஸ்ரீ மகாதேவன் மற்றும் ஓஎஸ் அருண் ஆகியோர், கர்நாடக இசையில், கிறிஸ்தவ பாடல்களை பாடும் நிகழ்ச்சியில் பங்கேற்க கடும் எதிர்ப்பு கிளம்பியது. இப்போது, சுதா ரகுநாதன் குறி வைக்கப்பட்டுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.