நிறைமாத கர்ப்பிணியாக பாடகி சைந்தவி... முதன் முறையாக வெளியான க்யூட் போட்டோஸ்...!

By Kanimozhi Pannerselvam  |  First Published May 16, 2020, 1:01 PM IST

அதேபோல் நிறைமாத கர்ப்பிணியான சைந்தவியும் எவ்வித போட்டோக்களையும் வெளியிடவில்லை. 


தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராகவும், பிரபல நடிகராகவும் வலம் வருபவர் ஜி.வி.பிரகாஷ் குமார். சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இவரது இசையில்  வெளியான “வெய்யோன் சில்லி”, ”மண் உருண்டை” ஆகிய பாடங்கள் மில்லியன் கணக்கில் வியூஸ்களை பெற்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மேலும் பிசி ஹீரோவான ஜி.வி.பிரகாஷ் வருஷம் முழுவதும் ஏகப்பட்ட படங்களை தன் கைவசம் வைத்துள்ளார். இப்படி அடுத்தடுத்து சாதனை படைத்து வரும் ஜி.வி.பிரகாஷ் அப்பாவான சந்தோஷத்தில் இருக்கிறார். 

Tap to resize

Latest Videos

பள்ளியில் படிக்கும் போதே நண்பர்களாக பழகி வந்த ஜி.வி.பிரகாஷ், சைந்தவி இடையே காதல் மலர்ந்தது. இதையடுத்து 2013ம் ஆண்டு இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கர்ப்பமாக இருந்த ஜி.வி.பிரகாஷ் மனைவி சைந்தவி கடந்த மாதம் 19ம் தேதி அழகிய பெண் குழந்தை பெற்றெடுத்தார். இந்த செய்தியை ஜி.வி.பிரகாஷ் ராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவிக்க திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து மழை பொழிந்தனர். 

இதையும் படிங்க: கறுப்பு நிற ட்ரான்ஸ்பிரண்ட் புடவையில் கண்கூசும் அளவிற்கு கவர்ச்சி... ரசிகர்களை ஏங்க வைத்த சாக்‌ஷி...!

தற்போது ஆன்லைன் யுகத்தில் கர்ப்பம் தரித்த முதல் நாளில் இருந்து குழந்தை பிறப்பது, பெயர் வைப்பது என அனைத்தையும் விதவிதமாக போட்டோ எடுத்து சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகின்றனர்.அதேபோல் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் பெண்கள் போட்டோ ஷூட்களை நடத்தி, தங்களது தாய் நினைவுகளை மறக்க முடியாத பொக்கிஷங்களை சேமித்து வருகின்றனர்.  ஆனால் ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி தம்பதி கர்ப்பமாக இருப்பதை சோசியல் மீடியாவில் வெளியிடவில்லை. 

இதையும் படிங்க: கணவருடன் சேர்ந்து சமந்தா பார்த்த காரியம்... பொறுப்பற்ற செயலால் பொங்கி எழுந்த ரசிகர்கள்...!

அதேபோல் நிறைமாத கர்ப்பிணியான சைந்தவியும் எவ்வித போட்டோக்களையும் வெளியிடவில்லை. தற்போது முதன் முறையாக சைந்தவி நிறைமாத கர்ப்பிணியாக இருந்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. நிறைமாத வயிறுடன் தாய்மை அழகு ஜொலி ஜொலிக்கும் சைந்தவியின் புகைப்படங்கள் அனைத்தும் லைக்குகளை குவித்து வருகிறது. ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி தம்பதி தங்களது மகளுக்கு “அன்வி” என பெயரிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  சைந்தவியின் க்யூட் போட்டோஸ் இதோ...

 

 

 

 

click me!