மே 17க்குப் பிறகு சினிமா படப்பிடிப்புகள் தொடங்குகிறதா?... அதிரடி அறிவிப்பிற்காக காத்திருக்கும் திரைத்துறை...!

By Kanimozhi PannerselvamFirst Published May 16, 2020, 12:06 PM IST
Highlights

அதன் பின்னர் கோவில்பட்டியில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சரிடம் சினிமா படப்பிடிப்பிற்கு அனுமதி அளிக்கப்படுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

உலகை ஆட்டி படைக்கும் கொரோனா வைரஸிற்கு இந்தியா மட்டும் விதி விலக்கல்ல. இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பால் மே 17ம் தேதி வரை மூன்றாம் கட்டமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த அதிரடி உத்தரவால் சினிமாத்துறை கடும் சரிவை சந்தித்து வருகிறது. கொரோனா பிரச்சனையால் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி முதலே அனைத்து படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டன. தியேட்டர்கள் மூடப்பட்டதால் ரிலீஸுக்கு தயாரான புதுப்படங்கள் அனைத்தும் தேங்கியுள்ளன. 

இதையும் படிங்க: உடலோடு ஒட்டி உறவாடும் உடை... அமலா பாலின் கன்றாவி டிரஸை பார்த்து கழுவி ஊத்தும் நெட்டிசன்கள்...!

அனைத்து விதமான ஷூட்டிங்குகளும் நிறுத்தப்பட்டதால் பெப்சி சங்கத்தைச் சேர்ந்த 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தினக்கூலி சினிமா தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர். இதையடுத்து செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூவை சந்தித்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகளை மேற்கொள்ளவாவது அனுமதிகோரினர். 

இதையும் படிங்க: கறுப்பு நிற ட்ரான்ஸ்பிரண்ட் புடவையில் கண்கூசும் அளவிற்கு கவர்ச்சி... ரசிகர்களை ஏங்க வைத்த சாக்‌ஷி...!

இதையடுத்து மே 11ம் தேதி முதல் டப்பிங், விஷுவல் எபெக்ட்ஸ், பின்னணி இசை, மிக்ஸிங், எடிட்டிங் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது ஊரடங்கில் சில தளர்வுகள் கொண்டு வரப்பட்ட தொழிற்சாலைகள் மற்றும் சில கடைகளை நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள இளம்புவனம் மற்றும் பாண்டவர்மங்கலம் ஆகிய பகுதிகள் கொரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. அங்குள்ள மக்களுக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ உணவு பொருட்களை வழங்கினார். 

இதையும் படிங்க: கணவருடன் சேர்ந்து சமந்தா பார்த்த காரியம்... பொறுப்பற்ற செயலால் பொங்கி எழுந்த ரசிகர்கள்...!

அதன் பின்னர் கோவில்பட்டியில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சரிடம் சினிமா படப்பிடிப்பிற்கு அனுமதி அளிக்கப்படுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. சினிமா படப்பிடிப்பு என்பது லைட் மேன் முதல் இயக்குநர் வரை நூறு முதல் 200 தொழிலாளர்கள் பணிபுரியம் சூழ்நிலை உள்ளது. படப்பிடிப்பு நடைபெறும் போது அப்பகுதியில் பார்வையாளராக மக்களும் கூடக் கூடிய சூழ்நிலை உள்ளது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு வரும் 17-ம் தேதிக்கு பின்னர் சுய ஊரடங்கு எந்த நிலை வருகின்றதோ, அதற்கு ஏற்ப சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி கொடுப்பது பற்றி முதல்வர் முடிவு எடுப்பார்' என்று கூறியுள்ளார். 

click me!