
பிரபல பின்னணி பாடகியான, தற்போது சென்னையில் வசித்து வரும் நிலையில்... இவருக்கு திடீர் என ஏற்பட்ட உடல்நல குறைவு காரணமாக, சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் இவரின் உடல்நிலை குறித்து, தற்போது வெளியாகியுள்ள தகவலில்... பி.சுசிலாவின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவ வட்டாரத்தில் கூறப்படுகிறது. சிறுநீரகக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பி.சுசீலா ஆந்திர மாநிலம், விஜயநகரத்தில் 1935-ம் ஆண்டு பிறந்தவர். இவரின் தாய் மொழி தெலுங்காக இருந்தாலும் தமிழ் மொழியை எழுத்து பிழை இன்றி நேர்த்தியாக ஒவ்வொரு சொற்களையும் உள்வாங்கி பாட கூடியவர். 89 வயதாகும் இவர்.. சமீப காலமாக திரைப்படங்களில் பாடுவது இல்லை என்றாலும், தன்னை மதித்து நிகழ்ச்சிகளுக்கு யாரேனும் அழைப்பு விடுத்தால் அதில் தவறாமல் கலந்து கொள்வார்.
இதுவரை சுமார் 50-ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி உள்ள பாடகி சுஷீலா, தமிழ் மட்டும் இன்றி, தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, போன்ற பல்வேறு மொழிகளில் பாடியுள்ளார். திரைப்பட பாடல்கள் மட்டும் இன்றி ஏராளமான பக்தி பாடல்களும் பாடியுள்ளார். 1957-ம் ஆண்டு மோகன் ராவ் என்பவரை திருமணம் செய்துகொண்ட பி.சுஷீலாவுக்கு, ஜெயகிருஷ்ணா என்கிற ஒரு ஒரு மகன் மட்டுமே மட்டுமே உள்ளார்.
இவரின் கணவர் 1990-ஆம் ஆண்டு மரணமடைந்த நிலையில், தற்போது சென்னையில் தன்னுடைய மகனுடன் தான் தற்போது பி.சுசீலா வசித்து வருகிறார். மேலும் தன்னுடைய பெயரில் ட்ரெஸ்ட் ஒன்றையும் நடத்தி வரும் இவர் அதன் மூலம், இசை பயில ஆர்வம் காட்டும் ஏழை மாணவர்களுக்கு உதவுவதோடு, நலிந்த கலைஞர்களுக்கும் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். 5 முறை தேசிய விருது உட்பட ஏராளமான விருதுகளை பி.சுஷீலா வாங்கி குவித்துள்ளார்.
இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவலை அறிந்து ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலர்.. விரைவில் உடல்நல பெற தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.