Jonita Gandhi dance : பாடகியின் பால்கனி அரபிக் குத்து..கன்னட பாடகி ஜோனிடா காந்தியின் மாஸ் ஸ்டெப்ஸ்..

Kanmani P   | Asianet News
Published : Feb 23, 2022, 08:27 PM IST
Jonita Gandhi dance : பாடகியின் பால்கனி அரபிக் குத்து..கன்னட பாடகி ஜோனிடா காந்தியின் மாஸ் ஸ்டெப்ஸ்..

சுருக்கம்

 Jonita Gandhi dance : இந்தியாவை பிறப்பிடமாக கொண்ட கன்னட பிளேபேக் சிங்கர் ஜொனிதா காந்தி..விஜயின் பீஸ்ட்..அரபிக் குத்து பாடலுக்கு நடனமாடியுள்ள வீடியோ வைரலாகி  வருகிறது.. 

லிட்டில் சூப்பர்ஸ்டார் சிம்புவின் வேட்டை மன்னன் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் நெல்சன் (Nelson). அப்படம் சில பிரச்சனைகளால் ரிலீசாகாமல் முடங்கிப்போனது. இதையடுத்து லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவை வைத்து அவர் இயக்கிய கோலமாவு கோகிலா திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றது.

பின்னர் சிவகார்த்திகேயனுடன் இணைந்த நெல்சன். அவர் நடித்த டாக்டர் (Doctor) படத்தை இயக்கினார். இப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன் திரையரங்கில் வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றியை ருசித்தது. மேலும் இப்படம் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து பாக்ஸ் ஆபீஸிலும் பட்டையை கிளப்பியது.

தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் நெல்சன் படத்தை இயக்கி உள்ளார் நெல்சன். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். அனிருத் (Anirudh) இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

பீஸ்ட் படத்தின் முதல் பாடலான ‘அரபிக் குத்து’ (Arabic kuthu) கடந்த பிப்ரவரி 14-ந் தேதி காதலர் தினத்தன்று வெளியிடப்பட்டது. அனிருத் மற்றும் ஜோனிடா காந்தி இணைந்து பாடி இருந்த இப்பாடலுக்கு சிவகார்த்திகேயன் பாடல் வரிகள் எழுதியிருந்தார். வெளியானது முதலே வைரல் ஹிட் ஆன இப்பாடல் பட்டி தொட்டி எங்கும் பட்டைய கிளப்பி வருகிறது.

பொதுவாக ஒரு பாடல் டிரெண்டானாலே அதனை பலரும் ரீல்ஸ் செய்ய தொடங்கிவிடுவார்கள். அப்படி இருக்கையில் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பிய 'அரபிக்குத்து' (Arabic kuthu) பாடலை மட்டும் சும்மாவா விடுவார்களா என்ன. ரசிகர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை அரபிக் குத்து பாடலுக்கு ஆட்டம் போட்டு வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் நடிகை யாஷிகா ஆனந்த் (yashika aannand) பிங்க் நிற கவர்ச்சி உடையில் அரபிக் குத்து பாட்டுக்கு ஆட்டம் போட்டு ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் அவரை ட்ரோல் செய்து வருகின்றனர். இது அரபிக் குத்து மாதிரி இல்லையே முரட்டு குத்து மாதிரில இருக்கு என கமெண்ட்டில் கிண்டலடித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்தியாவை பிறப்பிடமாக கொண்ட கன்னட பிளேபேக் சிங்கர் ஜொனிதா காந்தி..விஜயின் பீஸ்ட்..அரபிக் குத்து பாடலுக்கு நடனமாடியுள்ள வீடியோ வைரலாகி  வருகிறது.. 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?