
நேற்று ஒரு பெண் இந்திய ராணுவத்தில் இருந்த தன் தந்தையை கார்கில் போரில் இழந்தேன் என் ஒரு வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார், அது வைரலாக பரவி பலரது கவனத்தை ஈர்த்தது.
மேலும் அதில் அவர் கூறுகையில் 'பாகிஸ்தான் என் தந்தையை கொல்லவில்லை, போர் தான் கொன்றது. இந்த பிரச்சனையை பேசி தீர்த்திருந்தால் என்னை போன்ற பலர் தந்தையோடு இருந்திருப்பார்கள்' என உருக்கமாக அந்த பெண் அட்டையில் எழுதிய வார்த்தையில் கூறியிருந்தார்.
அதை பார்த்த கிரிக்கெட் வீரர் சேவாக், "நான் இரண்டு முறை முச்சதம் அடிக்கவில்லை, என் பேட் தான் அடித்தது" என கலாய்த்திருந்தார்.
இதற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேவாகிற்கு பதிலடி கொடுக்கும் வகையில், கிரிக்கெட் என்பது ஜென்டில் மேன்கள் விளையாட்டு, இது உங்களுக்கு கிடைத்த பரிசு, ஆனால் நீங்கள் ஒரு ஜென்டில் மேன் என்பதை மறந்துவிட்டிர்களா இன்று என மறைமுகமாக ஷேவாக்கை தாக்கியுள்ளார் சின்மயி.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.