இசைக்கருவிகளை சரியாக பார்த்துக் கொள்ளாமல் உடைச்சுட்டாங்க... ஏர்லைன்கள் மீது பாடகர் பென்னி தயாள் குற்றச்சாட்டு!

By Narendran SFirst Published Dec 31, 2022, 7:20 PM IST
Highlights

இசைகருவிகளை பார்த்துக்கொள்ளாமல் உடைத்துவிடுவதாக அனைத்து ஏர்லைன்ஸ்கள் மீதும் பிரபல பாடகர் பென்னி தயாள் குற்றம்சாட்டியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இசைகருவிகளை பார்த்துக்கொள்ளாமல் உடைத்துவிடுவதாக அனைத்து ஏர்லைன்ஸ்கள் மீதும் பிரபல பாடகர் பென்னி தயாள் குற்றம்சாட்டியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய், ரஜினிகாந்த், சிம்பு உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் ஹிட் பாடல்களை கொடுத்தவர் தான் பாடகர் பென்னி தயாள். இவர் தற்போது தனியார் தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில் நடுவராகவும் இருந்து வருகிறார். இந்த நிலையில் இவரது சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது பதிவில் ஏர்லைன்ஸ்கள் அனைத்தையும் விளாசியுள்ளது தான் பேசுபொருளாகியுள்ளது. இஸ்டாகிராம் பதிவில், இது இந்தியாவிலுள்ள அனைத்து ஏர்லைன்களுக்குமான செய்தி. இசைக்கலைஞர்கள் கடினமாக உழைத்து பணம் சம்பாதிக்கிறார்கள்.

இதையும் படிங்க: செம்ம கொண்டாட்டத்தில் 'பாக்கிய லட்சுமி' சீரியல் நடிகர்கள்..! கேக் வெட்டி ஜமாய்த்த போட்டோஸ் வைரல்!

அவர்கள் இசை நிகழ்ச்சிகளுக்காக செல்லும் போது அவர்களது இசைக்கருவிகளை ஏர்லைன்கள் சரியாக பார்த்துக் கொள்வதில்லை. இண்டிகோ,விஸ்தாரா, ஏர் இந்தியா, ஸ்பைஸ்ஜெட் ஆகிய நிறுவனங்கள் இது போன்று இசைக்கருவிகளை எடுத்துச் செல்லும் போது அக்கறையின்றி செயல்படுகிறது. பலர் தங்களது பொருட்களை உடைந்த நிலையில் எடுத்துச் செல்வது போன்ற காணொளிகளை பார்த்து வருகிறேன். அது உங்களது அஜாக்கிரதையினால் தான் நிகழ்கிறது. அதனை எப்போதும் ஒப்புக் கொள்ள முடியாது. தனிப்பட்ட முறையில் 'விஸ்தாரா' நிறுவனம் ஏழு நாட்கள் இடைவெளியில், எனது இரண்டு பேக்குகளை உடைத்துள்ளது.

இதையும் படிங்க: விஜய் சேதுபதி வெளியிட்ட பிக்பாஸ் சாக்ஷி அகர்வாலின் 'பொய்யின்றி அமையாது உலகு' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

அது எனக்கு திரும்ப வேண்டும். அதே நேரத்தில் இண்டிகோ நிறுவனமும் இசை கலைஞர்களிடம் அக்கறையின்றி செயல்படுகிறது; ஏர்லைன்ஸ்களில் பொருட்களை பார்த்துக் கொள்ளும் குழுவை நல்ல முறையில் தேர்வு செய்ய வேண்டும்; இசை நிகழ்ச்சிகளுக்கு செல்வதற்கு முன்பே இது போன்று உடைந்து விடுகிறது. எங்களது இசைக்கருவிகளை அக்கறையோடு பார்த்துக் கொள்ளுமாறு மிக தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்; எங்களுக்கு இசைக்கருவிகள் மிகவும் முக்கியமானது; அது தான் எங்களுக்கு உணவளிக்கிறது. இண்டிகோ, விஸ்தாரா, ஏர் இந்தியா, ஸ்பேஸ் ஜெட் ஆகிய நிறுவனங்கள் இசைக் கருவிகளை பார்த்துக் கொள்வதில் மிக மோசமாக இருக்கிறது. தயவு செய்து பொருட்களை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள். அது  உடைந்தால் அந்த தவறுக்கு பொறுப்பு எடுத்துக் கொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளார். 

click me!