ஒரே நாளில் ஓஹோனு ஓடிய சிம்ரன் வெளியிட்ட காதல் பாடல்! மீண்டும் இடையழயில் ரசிகர்களை மயக்கும் டான்ஸ் வீடியோ..!

Published : Feb 17, 2020, 01:55 PM IST
ஒரே நாளில் ஓஹோனு ஓடிய சிம்ரன் வெளியிட்ட காதல் பாடல்! மீண்டும் இடையழயில் ரசிகர்களை மயக்கும் டான்ஸ் வீடியோ..!

சுருக்கம்

90 களில், நடிகை சிம்ரனின் நடிப்பையும், அவருடைய நடனத்தையும் பார்த்து வியக்காத, ரசிக்காத... ரசிகர்களே இல்லை. விஜய், அஜித், விஜயகாந்த், என பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்திருந்தாலும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இவர் ஜோடி சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு கடந்த வருடம் தான் நிறைவேறியது.  

90 களில், நடிகை சிம்ரனின் நடிப்பையும், அவருடைய நடனத்தையும் பார்த்து வியக்காத, ரசிக்காத... ரசிகர்களே இல்லை. விஜய், அஜித், விஜயகாந்த், என பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்திருந்தாலும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இவர் ஜோடி சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு கடந்த வருடம் தான் நிறைவேறியது.

இயக்குனர் கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில், தலைவர் செம்ம ஸ்டைலிஷாக நடித்திருந்த, 'பேட்ட' படத்தில் சிம்ரன் நடித்திருந்தார். இதே படத்தில் மற்றொரு நாயகியாக நடிகை திரிஷாவும் நடித்திருந்தார்.

நடிப்பில் மட்டும் இல்லாமல், சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் தன்னை ரசிகர்களுக்கு நினைவூட்ட துவங்கியுள்ளார் சிம்ரன்.

மேலும் செய்திகள்: ரஜினி, அஜித், விஜய் என யாரையும் விட்டு வைக்காத சிவகார்த்திகேயன்!  அறிய புகைப்பட தொகுப்பு!
 

அந்த வகையில், கடந்த வாரம், டிக் டாக் செயலியில் தானும் இணைந்துள்ளதாக கூறி, தன்னுடைய மகன்களுடன் இருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இதை தொடர்ந்து இவர் புதிதாக யூ டியூப் ஒன்றையும் துவங்கியுள்ளார். சிம்ரன் அண்ட் சான்ஸ் பிலிம் என்ற பெயரில் ஆரம்பித்துள்ள இதில், சிம்ரன் அவர் சம்மந்தமான சில வீடியோக்களை பதிவு செய்து வருகிறார். அந்த வகையில் காதலர் தினத்தன்று, ஹிந்தி மொழியில் உருவாகியுள்ள அழகிய காதல் பாடலுக்கு நடனம் ஆடி, அதனை அவர் யூடியூப் பக்கத்தில் வெளியிட, ஒரே நாளில் லட்ச கணக்கான ரசிகர்கள் இந்த வீடியோவை பார்த்து ரசித்துள்ளனர்.

மேலும், இந்த வீடியோ இரண்டு நாட்களை ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. இதற்கு நடிகை சிம்ரனும் தன்னுடைய ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இந்த வீடியோ பாடலில் மீண்டும் தன்னுடைய இடையழகை அசைத்து இவர் நடனமாடியுள்ளது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நடமாடும் அரண்மனை! SRK-ன் பல கோடி ரூபாய் வேனிட்டி வேனுக்குள் இப்படியொரு வசதியா? மிரளவைக்கும் ரகசியம்!
மீண்டும் இணையும் மாஸ் கூட்டணி! 'அகண்டா 3' குறித்த அதிரடி அறிவிப்பு; கொண்டாட்டத்தில் பாலகிருஷ்ணா ரசிகர்கள்!