பெருமாள் பிச்சையின் மகன் "ராவண பிச்சை"! விக்ரமை பழிவாங்கும்  பாபி சிம்ஹா...

 
Published : Dec 28, 2017, 09:53 AM ISTUpdated : Sep 19, 2018, 01:44 AM IST
பெருமாள் பிச்சையின் மகன்  "ராவண பிச்சை"! விக்ரமை பழிவாங்கும்  பாபி சிம்ஹா...

சுருக்கம்

Bobby Simha plays as Perumal pichais son Raavana pichai role in Saamy square

ஹரி இயக்கத்தில், விக்ரம், த்ரிஷா, விவேக் ஆகியோர் நடித்த 'சாமி' படத்தின் இரண்டாம் பாகமான சாமி 2 படத்தின் வில்லனாக பாபி சிம்ஹா நடித்துள்ளார்.

கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான 'சாமி' படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடிக்கிறார். இப்படத்தில் வில்லனாக பாபி சிம்ஹா நடித்து வருகிறார். முதல் பாகத்தில் கோட்டா சீனிவாசராவ், பெருமாள் பிச்சை என்ற வேடத்தில் வில்லனாக நடித்திருந்தார். படமும் நல்ல வரவேற்பு பெற்றது.

விக்ரமுக்கும் கோட்டா சீனிவாசராவும்  நடிப்பில் மிரட்டியிருந்தார்கள். சாமி படத்திற்கு பலமாக அமைந்தது கோட்டா சீனிவாசராவ் நடிப்பு. இந்த நிலையில் தற்போது சாமி படத்தின் இரண்டாம் பாகம் விறுவிறுப்பாக தயாராகிக்கொண்டிருக்கிறது. முதல்பாகத்தின் முடிவில் வில்லன் கோட்டா சீனிவாசராவ் இறந்து விடுவது போல காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தது. அதனால் இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் வில்லனாக கோட்டா சீனிவாசராவின் மகன்கள் நெல்லையை கலக்கும் வில்லன்களாக தோன்றவுள்ளார்கள்.

பெருமாள் பிச்சையின் மகனாக பாபி சிம்ஹா, ராவண பிச்சை என்ற வேடத்தில் நடிக்கிறார். ஜிகிர்தண்டா படத்திற்குப்பின், பாபி சிம்ஹாவின் வித்தத்தனம் இப்படத்தில் ஹீரோவை மிஞ்சும் அளவிற்கு மிரட்டலாக உருவாக்கப்பட்டுள்ளதாம்.

சமீபத்தில், பழனி வட்டாரத்தில் நடைபெற்ற ஷூட்டிங்கின்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அதில் சில பேனர்கள் இடம்பெறுகின்றன. அந்த பேனரில் பெருமாள் பிச்சையின் மகன்களாக மகேந்திர பிச்சை, ராவண பிச்சை, தேவேந்திர பிச்சை ஆகிய மூன்று பெயர் போட்டோ அடங்கிய பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. இதில், நடுவில் இருக்கும் "ராவண பிச்சை" தான் மெயின் வில்லன்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நடமாடும் அரண்மனை! SRK-ன் பல கோடி ரூபாய் வேனிட்டி வேனுக்குள் இப்படியொரு வசதியா? மிரளவைக்கும் ரகசியம்!
மீண்டும் இணையும் மாஸ் கூட்டணி! 'அகண்டா 3' குறித்த அதிரடி அறிவிப்பு; கொண்டாட்டத்தில் பாலகிருஷ்ணா ரசிகர்கள்!