அனுஷ்கா சர்மாவுக்கு ‘பீட்டா’வின் சிறந்த நபருக்கான விருது

 
Published : Dec 27, 2017, 09:43 PM ISTUpdated : Sep 19, 2018, 01:44 AM IST
அனுஷ்கா சர்மாவுக்கு ‘பீட்டா’வின் சிறந்த நபருக்கான விருது

சுருக்கம்

Anushka Sharma Beta Award for Best Person

பிரபல பாலிவுட் நடிகையும், இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராத் கோலியை சமீபத்தில் மணந்தவருமான அனுஷ்கா சர்மாவுக்கு ‘பீட்டா’ அமைப்பின் சிறந்த நபருக்கான விருது வழங்கப்பட்டு உள்ளது.

நாய்களை காப்பாற்ற...

‘பிகே', ‘ஜப் டக் ஹை ஜான்', ‘ஏ தில் ஹை முஷ்கில்' ஆகிய படங்களில் நடித்த அனுஷ்கா, சைவப் பிரியர். வாண வேடிக்கைகள், பட்டாசுகளின் தாக்கங்களில் இருந்து நாய்களைக் காப்பாற்றியதற்காகவும் வண்டிகளில் குதிரையைப் பூட்டி இழுக்கும் முறைக்கு எதிராகப் போராடியதற்காகவும் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

விலங்கு உரிமை காப்பாளர்

இது குறித்துப் பேசிய ‘பீட்டா’ அமைப்பின் இணை இயக்குநர் சச்சின் பங்கேரா, ‘‘அனுஷ்கா சர்மா பெருமைக்குரிய விலங்குகள் உரிமை காப்பாளர். அவரின் அன்பும் முன்னெடுப்புகளும் எல்லை இல்லாதது.

அவரின் ஆரோக்கியமான சைவ உணவுப் பழக்கத்தை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று ‘பீட்டா’ அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறது. அதேபோல முடியும் நேரங்களில் எல்லாம் விலங்குகளுக்கு உதவ அனைவரும் முன்வர வேண்டும்'' என்று தெரிவித்து இருக்கிறார்.

விழிப்புணர்வு

விலங்குகளைக் காப்பதில் அனுஷ்கா சர்மாவின் பங்கு தற்போது அதிகரித்துள்ளது. விலங்குகள் பாதுகாப்பகங்களுக்குச் செல்வது, அவற்றின் பணிகளைத் தனது சமூக வலைதளப் பக்கங்களில் ஊக்குவிப்பது, பட்டாசு மற்றும் வாண வேடிக்கைகளால் விலங்குகள் பாதிக்கப்படுவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது, மும்பையில் குதிரை உள்ளிட்ட விலங்குகள் மூலம் வண்டி இழுப்பதைத் தடை செய்யக் கோருவது ஆகிய பணிகளை அனுஷ்கா முன்னெடுத்துள்ளார்.

அனுஷ்கா சர்மா நாயொன்றைத் தத்தெடுத்து, ‘டியூட்’ என்று பெயரிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நீயெல்லாம் கடவுளா? உனக்கு எதுக்கு பூஜை? விவாகரத்து வதந்திக்கு மத்தியில் வாழ்வின் வலிகளைப் பகிர்ந்த செல்வராகவன்!
கொங்குநாட்டை அதிரவிட்ட விஜய்... ஈரோட்டில் தளபதி எடுத்த மாஸ் செல்பி வீடியோ வைரல்