
டி.ராஜேந்தரின் மகனான சிம்பு, சிறுவயதில் இருந்தே சினிமாவில் நடித்து வருகிறார். தன் தந்தையை போலவே நடிப்பு, இசை, இயக்கம், பாடகர், பாடலாசிரியர் என பன்முகத்திறமை கொண்ட கலைஞனாக விளங்கி வரும் சிம்பு, தனது கடின உழைப்பால் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக உயர்ந்துள்ளார்.
கடந்த 2010-ம் ஆண்டு கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த விண்ணைத்தாண்டி வருவாயா படத்துக்கு பின் குறிப்பிடத்தக்க வெற்றியை கொடுக்க முடியாமல் தவித்து வந்த சிம்புவுக்கு, சமீபத்தில் வெளியான மாநாடு திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றுத்தந்தது.
இப்படம் மூலம் சுமார் 11 ஆண்டுகளுக்கு பின் பிளாக்பஸ்டர் வெற்றியை ருசித்துள்ள சிம்புவுக்கு, தற்போது கோலிவுட்டில் மார்க்கெட் அதிகரித்துள்ளது. தற்போது கவுதம் மேனனின் வெந்து தணிந்தது காடு, கோகுல் இயக்கும் கொரோனா குமார், ஒபிலி கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார் சிம்பு.
திரைத்துறையில் சிறந்து விளங்கியதற்காக சிம்புவுக்கு இன்று வேல்ஸ் யுனிவர்சிட்டியின் நிறுவனர் ஐசரி கணேஷ் தலைமையில் நடைபெற்ற விழாவில் டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. நடிகர் சிம்பு தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் நடித்து வரும் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தை ஐசரி கணேஷ் தான் தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இன்று பிறந்தநாள் காணும் சிம்புவுக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. மேலும் அவரின் பிறந்தநாளுக்காக பத்து தல படக்குழு டபுள் டிரீட் கொடுத்துள்ளது. அந்த வகையில் சிம்புவின் சிறு வயது நண்பரான பிக் பாஸ் மகத் வீடியோ கேம் விளையாடும் வீடியோ ஒன்றை சேர் செய்துள்ளார்..அதில் மகத் வீடியோ கார் ஓட்டுவது போன்ற வீடியோ கேம் விளையாடுகையில் சிம்பு வெறித்தனமாக அவருக்கு கார் ஓட்ட சொல்லிக்கொடுக்கிறார்..
ஏற்கனவே சிம்பு வெளியில் பிரபல நடிகராக இருந்தாலும் சிறு வயதிலிருந்தே வீடியோ கேம் வெறியர் என்பது பலர் அறிந்தது தான்..ஆனால் பபிறந்த நாள் அன்றுகூட வேறெந்த வேலையும் செய்யாமல் வீடியோ கேம் வெறித்தனமாக வீட்டிலிருந்து விளையாடுவது ரசிகர்கள் மத்தியில் தவறான எடுத்துக்காட்டாக கூடும் என நெட்டிசன்கள் கருதுகின்றனர்...
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.