புனித் ராஜ்குமார் வீட்டிற்கு சென்ற புஷ்பா நாயகன் அல்லுஅர்ஜூன்..4 மாதங்களுக்கு பிறகு அஞ்சலி..

Kanmani P   | Asianet News
Published : Feb 03, 2022, 03:21 PM IST
புனித் ராஜ்குமார் வீட்டிற்கு சென்ற புஷ்பா நாயகன் அல்லுஅர்ஜூன்..4 மாதங்களுக்கு பிறகு அஞ்சலி..

சுருக்கம்

கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் மறைந்து 4 மாதங்கள் கழித்து புஷ்பா நாயகன் ஆளு அர்ஜுன் அவரது  குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்...

கன்னட திரையுலகில் பவர் ஸ்டார் என்றழைக்கப்பட்ட முன்னணி நடிகரான புனீத் ராஜ்குமார் கடந்த செப்டம்பர் மாதம் 29 அன்று மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருடைய மரணம் கன்னட திரையுலகை மட்டுமல்லாமல், கர்நாடக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 46 வயதில் அவருக்கு ஏற்பட்ட மரணத்தை யாராலும் ஜீரணிக்க முடியாமல் போனது. பெங்களூரு காண்டீரவா ஸ்டூடியோவில் உள்ள தந்தையும் நடிகருமான ராஜ்குமார், தாயார் பர்வதம்மாள் ஆகியோரின் சமாதிகளுக்கு அருகே புனீத் ராஜ்குமாரின் உடலும் நல்லடக்கம் செய்யப்பட்டது. 

புனீத் ராஜ்குமார் உயிருடன் இருந்தபோது அவர் ஏழை, எளிய மக்களுக்கு செய்த உதவிகள், ஏழைக் குழந்தைகளின் கல்விகாக செய்த செலவு என அவரைப் பற்றிய செய்திகள் தொடர்ந்து வெளியானதால், அவர் மீது மரியாதையும் மக்கள் மத்தியில் அதிகரித்தது. பெங்களூரிவில் உள்ள அவருடைய நினைவிடத்தைக் காண அவருடைய ரசிகர்கள் மட்டுமல்லாமல், பொதுமக்களும் நாள்தோறும் வந்து பார்வையிட்டு மரியாதை செய்து வருகின்றனர். அவரை அங்கீகரிக்கும் வகையில் கர்நாடக அரசின் உயரிய விருதான கர்நாடக ரத்னா விருது புனீத் ராஜ்குமாருக்கு வழங்கப்பட்டது.  நடிகர் புனித் ராஜ்குமாரின் கடைசிப் படமான ஜேம்ஸை அவரது முதல் பிறந்தநாளான மார்ச் 17, 2022 அன்று திரையரங்குகளில் வெளியிட தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

இந்நிலையில் புனித் ராஜ்குமார் வீட்டிற்கு சென்ற புஷ்பா பட நாயகன் அல்லு அர்ஜுன்..புனித்தின் சகோதரர் சிவகுமார் மாறும் அவரது மனைவியை சந்தித்து புனித் குறித்து இரங்கல் தெரிவித்துள்ளார்.. 4 மாதங்கள் கழித்து அல்லு அர்ஜுன் கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமாருக்கு இரங்கல் தெரிவித்த புகைப்படம் வலைதளத்தில் வைரலாகி வருகிறது..

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

சமந்தாவின் ஹனிமூன் பிளான்: ராஜ் உடன் ரொமான்டிக் டிரிப் எங்கே?
ஒரே ஆண்டில் 2 தோல்விகள் கொடுத்த பிரபாஸ்!