Valimai VS Gangubai kathiawadi :அஜித்துக்கு சவால் விடும் ஆலியாபட்! வலிமையுடன் மோத ரெடியான கங்குபாய் கத்தியவாடி

Ganesh A   | Asianet News
Published : Feb 03, 2022, 10:51 AM IST
Valimai VS Gangubai kathiawadi :அஜித்துக்கு சவால் விடும் ஆலியாபட்! வலிமையுடன் மோத ரெடியான கங்குபாய் கத்தியவாடி

சுருக்கம்

ஆலியா பட் நடித்துள்ள கங்குபாய் கத்தியவாடி ரிலீசாக உள்ள நிலையில், அடுத்த மாதம் அவர் நடித்துள்ள மற்றொரு பிரம்மாண்ட படமான ஆர்.ஆர்.ஆர் வெளியாக உள்ளது. 

ஆசியாவின் கவர்ச்சிகரமான பெண் என்ற பெருமைக்கு சொந்தக்காரி ஆலியா பட். பாலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம் வரும் இவர், தற்போது கங்குபாய் கத்தியவாடி என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். சஞ்சய் லீலா பன்சாலி இயக்கி உள்ள இப்படத்தில் நடிகை ஆலியா பட் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மும்பையையே கலக்கிய பெண் கேங்கஸ்டரின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் உருவாகி உள்ளது. பாலியல் தொழிலாளியாக இருந்த ஒரு பெண் எப்படி அண்டர்கிரவுண்ட் டான் ஆனார் என்பதே இப்படத்தின் சுருக்கமான கதை. மாஃபியா குயின்ஸ் ஆஃப் மும்பை என்கிற புத்தகத்தை தழுவி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

இப்படம் வருகிற பிப்ரவரி 25-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதற்கு ஒருநாள் முன்னதாக, அதாவது பிப்ரவரி 24-ந் தேதி அஜித்தின் வலிமை திரைப்படம் வெளியாக உள்ளது. இதனால் இந்த இரண்டு படங்களுக்கும் இடையே நேரடி மோதல் உருவாகி உள்ளது. வலிமை படம் இந்தியிலும் வெளியாக உள்ளதால், கங்குபாய் கத்தியவாடி படத்துக்கு கடும் போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மாதம் ஆலியா பட் நடித்துள்ள கங்குபாய் கத்தியவாடி ரிலீசாக உள்ள நிலையில், அடுத்த மாதம் அவர் நடித்த மற்றொரு பிரம்மாண்ட படம் வெளியாக உள்ளது. ராஜமவுலி இயக்கியுள்ள ஆர்.ஆர்.ஆர் படத்திலும் நடிகை ஆலியா பட் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அடுத்தடுத்து இரண்டு பிரம்மாண்ட படங்கள் வெளியாக உள்ளதால் ஆலியா பட் செம குஷியில் உள்ளாராம். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?