சிம்புவை சந்தித்த பிக் பாஸ் பிரபலம்.. செம ஹிட் அடித்து வரும் படப்பிடிப்புத்தள புகைப்படம்..

Kanmani P   | Asianet News
Published : Jan 04, 2022, 06:39 PM IST
சிம்புவை சந்தித்த பிக் பாஸ் பிரபலம்.. செம ஹிட் அடித்து வரும் படப்பிடிப்புத்தள புகைப்படம்..

சுருக்கம்

வெந்து தணிந்தது காடு படப்பிடிப்பின் போது இயக்குனருடன் சிம்பு,ராதிகா  எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

நடிகர் சிம்புவின் 47 ஆவது படமாக உருவாகி வரும் 'வெந்து தணிந்தது காடு' படத்தின், ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் வெளியான போதே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு சிம்பு ரசிகர்களுக்கு எகிறியது. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் புதிய அப்டேட் ஒன்றை கொடுத்து ரசிகர்களை அசர வைத்துள்ளார் சிம்பு.

நடிகர் சிம்பு கெளதம் மேனன் இயக்கத்தில் 'அச்சம் என்பது மடமையடா' படத்தின் வெற்றிக்கு பின்னர், மீண்டும் சுமார் 5 வருடங்கள் கழிந்து இணைந்து நடித்து வரும் திரைப்படம் 'வெந்து தணிந்தது காடு'. இதுவரை ஏற்று நடித்திராத வித்தியாசமான கதாபாத்திரத்தில் சிம்பு நடிப்பது, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான போதே தெரிந்தது. அதே போல் எப்போதும் இதமான காதல் கதைகளையே இயக்கிய கெளதம் மேனன், இந்த முறை யாரும் எதிர்பார்க்காத ஒரு படைப்பை கொடுக்க தயாராகி விட்டார்.

இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு திருச்சந்தூரில் எடுத்து முடிக்கப்பட்ட நிலையில், இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பும் முடிந்து விட்டது.  இப்படத்தில் சிம்புக்கு ஜோடியாக காயடுலோஹர் என்பவர் நாயகியாக உள்ளார். எனவே சிம்புவின் காதல் காட்சிகள், இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் எடுக்க படலாம் என கூறப்பட்டது. அவ்வப்போது இந்த படம் குறித்த தகவல்கள் வெளியாகி வருகிறது.

'மாநாடு' படத்தின் வெற்றியை கொண்டாடிய பின்னர், தற்போது மீண்டும்... சிம்பு கெளதம் மேனன் இயக்கத்தில், நடித்து வரும் 'வெந்து தணிந்தது காடு' படத்தில் ஆர்வம் காட்ட துவங்கியுள்ளார். இந்நிலையில் தற்போது இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில், நேற்றிரவு நடிகை ராதிகா சரத்குமார், சிம்பு, கெளதம் மேனனுடன் இருக்கும் புகைப்படத்தினை உற்சாகமுடன் வெளியிட்டிருந்தார். அதனைத்தொடர்ந்து தற்போது, ’பிக்பாஸ்’ வருடணுடன் சிம்பு இருக்கும் படப்பிடிப்புத்தளப் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பிரஜனுக்கு சம்பளத்தை கிள்ளி கொடுக்காமல் அள்ளிக் கொடுத்த பிக் பாஸ்... அடேங்கப்பா இத்தனை லட்சமா?
ஓவர் பில்டப்போடு வந்து புஸ்ஸுனு முடிந்த புதுச்சேரி மாநாடு..! விஜய் பேசியது என்ன? தளபதியின் முழு ஸ்பீச் இதோ