சிம்பு கொடுத்த டார்ச்சர்.... கழற்றிவிட்ட கௌதம் மேனன்..!

 
Published : Feb 21, 2018, 11:38 AM ISTUpdated : Sep 19, 2018, 01:59 AM IST
சிம்பு கொடுத்த டார்ச்சர்.... கழற்றிவிட்ட கௌதம் மேனன்..!

சுருக்கம்

simbu torcher director gowtham menon

கௌதம் மேனன்

கௌதம் மேனன் என்றாலே காதல் என்ற வார்த்தைதான் நம் நினைவுக்கு வரும்.அந்த அளவுக்கு  தனது படத்தில் நடிப்பவர்களையே உண்மையான காதலர்களாகவே காட்டியிருப்பார்.இவருடைய காதல் படங்கள் தனித்துவமான காதல் படமாக இருக்கும்.

விடிவி இரண்டாம் பாகம்

அந்த வகையில் இவருடைய இயக்கத்தில் 2010 ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் விண்ணை தாண்டி வருவாயா.இந்த படத்தில் சிம்பு திரிஷா முதன்மை ரோலில் நடித்திருந்தனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார்.ஒரு அழகான காதல் கதையை அற்புதமாக காட்டியிருப்பார் கௌதம் மேனன்.இந்த படம் காதலர்கள் மத்தியில் வெற்றி பெற்றதால் இந்த படத்தின் இரண்டாம்பாகத்தை எடுக்க திட்டமிட்டிருந்தார் கௌதம் மேனன்.

கடுப்பு

ஆனால் ”அச்சம் என்பது மடமையடா” படப்பிடிப்பின் போது சிம்பு படப்பிடிப்பை குறித்த நேரத்தில் சரியாக முடித்து கொடுக்கவில்லை படப்பிடிப்புக்கு நேரம் தாழ்த்தி வருவது போன்ற காரணங்களால் அவர் மீது கடுப்பில் உள்ளார்.

மீண்டும் மாதவன்

இதனால் சிம்புவை கழற்றி விட்டு விடிவி 2 படத்தின் கதாநாயகனாக மாதவனை தேர்வு செய்துள்ளார். மேலும் கௌதம் மேனனின் முதல் படமான மின்னலே படத்திற்கு பிறகு கிட்டதட்ட 17 ஆண்டுகளுக்கு மீண்டும் இருவரும் இணைகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கதை

சிம்புவை மட்டும் மாற்றிய கௌதம் மேனன் ஹீரோயினை மாற்ற வில்லையாம்.ஜெஸ்ஸி வேடத்தில் திரிஷாவே நடிப்பார் என்று கூறப்படுகிறது.காதல் தோல்வி அடைந்த கார்த்திக் 8 வருடங்களுக்கு பிறகு என்ன நிலையில் இருக்கிறார்.ஜெஸ்ஸியை மீண்டும் சந்தித்தாரா என்பதே இந்த படத்தின் கதையாம்.

விரைவில்

மேலும் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் கன்னட சூப்பர் ஸ்டாரான புனித் ராஜ்குமார் மற்றும் மலையாள நடிகரான டொவினோ தாமஸ் ஆகியோர் நடிக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.விடிவி முதல் பாகத்தில் தற்போது திருமணம் செய்திருக்கும் நாக சைதன்யா, சமந்தா கெஸ்ட் ரோலில் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்கவுள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கோடி கோடியாக சம்பாரிச்சலும் கலைஞனுக்கு கை தட்டால் ரொம்ப முக்கியம் - சித்ரா லட்சுமணன்
யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்... ஆதி குணசேகரனால் ஆபத்தில் சிக்கும் ஜனனி - எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த அதிரடி