தனுஷுடன் இணையும்  பிரபல நடிகர்... யார் தெரியுமா?

Asianet News Tamil  
Published : Feb 20, 2018, 07:30 PM ISTUpdated : Sep 19, 2018, 01:59 AM IST
தனுஷுடன் இணையும்  பிரபல நடிகர்... யார் தெரியுமா?

சுருக்கம்

sasikumar jont the dhanush movie

என்னை நோக்கி பாயும் தோட்டா

கௌதம் மேனன் இயக்கத்தில் 2016 ம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கிய படம் தான் என்னை நோக்கி பாயும் தோட்டா.இந்த படத்தில் தனுஷ் ஹீரோவாக நடிக்கிறார். ஹீரோயினாக மேகா ஆகாஷ் நடிக்கிறார்.

புத்துயிர்

2016 ம் ஆண்டு தொடங்கிய இப்படம் நடுவில் படப்பிடிப்பு பல காரணங்களால் நடைபெறாமல் இருந்தது.கடந்த வருடம் டிசம்பர் மாதம் ஒரு வழியாக புத்துயிர் பெற்றது.

மாரி 2

தர்புகா சிவா இசையமைக்கும் இப்படத்திலிருந்து மறு வார்த்தை பேசாதே பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
சில நாட்கள் இப்படத்தில் நடித்த நடிகர் தனுஷ் படப்பிடிப்பு பிரச்சனையால் பாலாஜி மோகன் இயக்கும் மாரி 2 படத்தில் நடிக்க சென்று விட்டார்.தற்போது மீண்டும் இப்படத்தில் நடிக்க தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சசிகுமார்

இந்நிலையில் தனுஷுடன் இணைந்து இயக்குனரும் நடிகருமான சசிகுமார் நடிக்கவிருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.இந்த படத்தில் சசிக்குமார் கெஸ்ட் ரோலில் நடிக்கவிருக்கிறாராம். ஏற்கனவே பாகுபலி புகழ் ராணா டகுபதி இப்படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அந்த ஒரு சீன் தான் படத்தையே மாத்துச்சு!" - அஞ்சாதே உருவான ரகசியங்களை உடைத்த மிஷ்கின்!
மயில்வாகனத்திற்கு வந்த சோதனை! கையில் தட்டுடன் ஹோட்டலில் வேலை செய்யும் அவலம் - கார்த்திகை தீபம் லேட்டஸ்ட் அப்டேட்!