முதலில் அஜித்.இப்போ புனித்.... கலக்கும் டி.இமான்

 
Published : Feb 20, 2018, 06:37 PM ISTUpdated : Sep 19, 2018, 01:59 AM IST
முதலில் அஜித்.இப்போ புனித்.... கலக்கும் டி.இமான்

சுருக்கம்

d iman committed punith rajkumar moive


நான்காவது முறை

நடிகர் அஜித் நான்காவது முறையாக இயக்குநர் சிவாவுடன் இணைந்துள்ள படம் விசுவாசம்.இதில் அஜித்துக்கு ஜோடியாக நான்காவது முறையாக நயன்தாரா நடிக்கிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் துவங்க உள்ளது.

முதல் படம்

இப்படத்தின் இசையமைப்பாளராக டி.இமான் பணியாற்ற உள்ளார்.இதுதான் அவர் இசையமைக்கும் முதல் அஜித் படம்.வழக்கமாக டி. இமான் இசையமைக்கும் படத்தில் ஹீரோக்களை ஒரு பாட்டாவது பாட வைத்து விடுவார்.அந்த வகையில் அஜித்தை முதல்முறையாக விசுவாசம் படத்தில் பாட வைக்க போவதாக தகவல் வெளியானது. அஜித் இந்த படத்தில் பாடினால் அஜித் ரசிகர்கள் டி. இமானை தூக்கி வைத்து கொண்டாடுவார்கள்.

நூறாவது படம்

நூறு படங்களுக்கு மேல் இசையமைத்துள்ள டி.இமான் முதல் முதலில் இசையமைத்த படம் காதலே சுவாசம்.ஆனால் இந்த படம் சில காரணங்களால் வெளிவரவில்லை.முதல் படமாக வெளிவந்தது விஜயின் தமிழன்.தற்போது ஜெயம் ரவியின் டிக் டிக் டிக் படம் இமானுக்கு நூறாவது படமாகும்

புனித் ராஜ்குமார்

இந்நிலையில் கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் நடிக்க இருக்கும் படத்திற்கும் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார் இமான்.இந்த படத்தை ராக்லைன் வெங்கடேஷ் தயாரிக்கிறார்.ஏற்கனவே ராக்லைன் வெங்கடேஷ் தயாரித்த கோட்டி கோப்பா 2 படத்திற்கு இசையமைத்துள்ளார் டி.இமான். இந்த கன்னடப் படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்குகிறார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பவன் கல்யாணுக்காக ராம் சரண் தியாகமா? ரிலீஸ் தேதியை மாற்றிய 'கேம் சேஞ்சர்' நாயகன்; ரசிகர்கள் கவலை!
பிக் பாஸ் வீட்டில் நாய் குறைக்க காரணம் என்ன? கண்ட்ரோல் பண்ண முடியாத பாரு, கம்ருதீன் செய்யும் சில்மிஷம்!