
காதல் கண்ணை மறைக்குதோ இல்லையோ? சமயங்களில் கண்ணை திறந்துவிடும். முன்னாள் காதலி ஹன்சிகாவுக்காக பதினைந்து நாள் கால்ஷீட் கொடுத்து ‘மஹா’என்கிற படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார் சிம்பு.
இந்தப்படத்தில் ஹன்சிகாதான் ஹீரோயின். சிம்பு ஒழுங்காக ஷுட்டிங் வருவதே பெரும்பாடு. இதில் பைனான்ஸ் பிரச்சனை காரணமாக படத்தை கிடப்பில் போட்டுவிட்டது தயாரிப்பு நிறுவனம். நடித்தது போக மிச்சமிருந்த நான்கு நாள் கால்ஷீட்டுக்கு இதோ அதோ என இழுபறியிலும் இழுபறி. இறுதியாக ஒரு தேதி கொடுத்திருக்கிறார் சிம்பு. ஜனவரி 18 ம் தேதிதான் அது. விமான நிலையத்தில் ஷுட்டிங். எப்படியோ ஐதராபாத்தில் பர்மிஷன் கிடைத்து அங்கே வரச்சொல்லி இக்கிறார்களாம். காத்திருக்கிறார் சிம்பு.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.