
சின்னத்திரை சீரியல் பிரபலங்களான மதனும், ரேஷ்மாவும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். அவர்கள் இருவருக்கு அண்மையில் குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது.
இந்த திருமணத்தில் சின்னத்திரை நட்சத்திரங்கள், சினிமா பிரபலங்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். சமூக வலைதளம் வாயிலாக ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்நிலையில், தங்களுக்கு கிடைத்த சர்ப்ரைஸ் வாழ்த்து குறித்து நடிகை ரேஷ்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதன்படி தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிம்பு, மதன் - ரேஷ்மா தம்பதிக்கு சர்ப்ரைஸாக வீடியோ கால் செய்து தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இந்த மகிழ்ச்சியான தருணத்தை வீடியோ பதிவு செய்துள்ள ரேஷ்மா, அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சிம்பு சர்ப்ரைஸாக வீடியோ கால் செய்ததும் தனது கணவர் மதன் மிகுந்த உற்சாகமடைந்து கத்தியதாக ரேஷ்மா அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். மேலும் சிம்புவுக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.