Pathu Thala : சிம்பு நடித்துள்ள வெந்து தணிந்தது காடு படத்தின் ரிலீஸ் தேதி கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அவரது மற்றொரு படமான பத்து தல படத்தின் வெளியீட்டு தேதியையும் படக்குழு அறிவித்துள்ளது.
மாநாடு படத்தின் வெற்றிக்கு பின் தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக உருவெடுத்துள்ளார் சிம்பு. இவர் நடிப்பில் தற்போது வெந்து தணிந்தது காடு திரைப்படம் உருவாகி உள்ளது. கவுதம் மேனன் இயக்கியுள்ள இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படம் வருகிற செப்டம்பர் 15-ந் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படியுங்கள்... Mahesh Babu : பில்கேட்ஸ் உடன் மகேஷ் பாபு சந்திப்பு... இணையத்தை கலக்கும் வைரல் போட்டோ
இதையடுத்து பத்து தல படத்தில் நடித்து வருகிறார் சிம்பு. இப்படத்தை சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய படங்களை இயக்கிய ஒபிலி என் கிருஷ்ணா இயக்குகிறார். இது கன்னடத்தில் வெளியாகி ஹிட் ஆன முப்தி படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். இப்படத்தில் நடிகர் சிம்பு கேங்ஸ்டராக நடித்து வருகிறார். இதற்காக அவர் உடல் எடையை சற்று அதிகரித்து நடித்து வருகிறார்.
இதையும் படியுங்கள்... 2022-ன் முதல் பாதி ஓவர்! விஜய், அஜித் சொதப்பினாலும் தமிழ் சினிமாவில் வசூலை வாரிக்குவித்த படங்களின் லிஸ்ட் இதோ
ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பாக கே.இ.ஞானவேல் ராஜா தயாரிக்கும் இப்படத்தில் சிம்புவுடன் கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கவுதம் மேனன், டீஜே அருணாச்சலம் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார்.
இதையும் படியுங்கள்... பஞ்சதந்திரம் 2-வில் அஜித்... பிரபலத்தின் கருத்துக்கு குவியும் லைக்ஸ் - ஓகே சொல்வாரா ஏகே?
இந்நிலையில், பத்து தல படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி இப்படம் வருகிற டிசம்பர் மாதம் 14-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் இந்த ஆண்டு சிம்பு நடித்த இரண்டு படங்கள் ரிலீசாக உள்ளன. இதனை அறிந்த ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.