
சமீபத்தில் சித்தார்த் நடித்த "சிவப்பு மஞ்சள் பச்சை", "அருவம்" ஆகிய படங்கள் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. இதையடுத்து சத்தமே இல்லாமல் "டக்கர்" என்ற படத்தில் முழு வீச்சில் நடித்து முடித்துள்ளார். அந்தப்படத்தை "கப்பல்" பட இயக்குநர் கார்த்திக் இயக்கியுள்ளார். இதில் திவ்யான் ஷா, கெளசிக், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அதிரடி ஆக்ஷன் நிறைந்த காதல் படமான "டக்கர்" படத்தின் போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
பேஷன் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள படத்தில் நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார். இந்தப் படத்திற்காக சிம்பு நீண்ட காலமாக தொடாமல் இருந்த ஒரு அவதாரத்தை திரும்ப எடுக்க உள்ளார். கால்ஷீட் பிரச்னை காரணமாக பட வாய்ப்புகள் கைவிட்டுப் போன நிலையில், தற்போது சபரிமலைக்கு மாலை போட்டு விரதம் இருந்து வருகிறார் சிம்பு. இந்நிலையில் மீண்டும் திரைப்படங்களில் பாட முடிவெடுத்துள்ள சிம்பு, அதை டக்கர் படத்தில் இருந்து தொடங்க உள்ளார்.
இந்தப்படத்தில் 'ரெயின்போ' என்று தொடங்க உள்ள பாடலை நடிகர் சிம்பு பாடியுள்ளார். மேலும் இதில் டபுள் ட்ரீட்டாக சிம்புவுடன் இணைந்து அந்தப் பாடலை பாடியுள்ளது நம்ம ஆண்ட்ரியா என்பது தான். செம்ம ரொமாண்டிக் சாங்கான ரெயின்போ பாடலை சிம்பு, ஆண்ட்ரியா ஜோடி பாடியுள்ளதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு இப்போதே இருமடங்காக அதிகரித்துள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.