
நித்யானந்தாவை சந்தித்ததாக சமூகவலைதளத்தில் புகைப்படங்கள் வைரலாகி வரும் நிலையில், பாடகி சின்மயி அதற்கான விளக்கத்தை ஆதாரத்துடன் வெளியிட்டுள்ளார். மீடூ புகார் சர்ச்சைகள் எழுந்த சமயத்தில் தமிழகத்தில் அதி பிரபலமானவர் பாடகி சின்மயி, யாரும் எதிர்பார்க்காத வகையில் கவிஞர் வைரமுத்து மீது மீடூ மூலம் பாலியல் புகார் கூறி தமிழகத்தில் பிரபலமானார்.
இந்நிலையில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கு தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் குரல் கொடுத்து வருகிறார். சின்மயிக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் பல்வேறு தரப்பினர் கருத்து கூறி வருகின்றனர் . அதே நேரந்தில் தொடர்ந்து பாலியல் குற்றச்சாட்டுகளில் சிக்கி வரும் நித்யானந்தாவை பாடகி சின்மயி மற்றும் அவரது தாயார் சந்தித்ததாக புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது, பாலியல் வன்முறைகளுக்கு எதிராக குரல் எழுப்பும் சின்மயி பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான நித்யானந்தாவைப்போய் சந்திப்பதா என கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இதுகுறித்து விளக்கம் அளித்திருக்கும் பாடகி சின்மயி இந்த புகைப்படங்கள் போலியானது என்று தெரிவித்துள்ளார். அதற்கான விளக்கத்தை ஆதாரத்துடன் கூறிய பின்னரும் ரசிகர்கள் மீண்டும் மீண்டும் ஏன் எப்படி செய்கிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை. இதை இலவசமாக செய்கிறார்களா அல்லது பணம் வாங்கிக்கொண்டு செய்கிறார்களா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.