பிரபல குணசித்திர நடிகர் பாலாசிங் காலமானார்… உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் மரணம் !!

Published : Nov 27, 2019, 07:55 AM IST
பிரபல குணசித்திர நடிகர் பாலாசிங் காலமானார்… உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் மரணம் !!

சுருக்கம்

உடல்நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரபல குணசித்திர நடிகர் பாலாசிங் சிகிச்சை பலனின்றி காலாமானார். அவருக்கு வயது 69.

மேடை நாடகங்களில் நடிகராக வலம் வந்த பாலாசிங், நாசர் இயக்கத்தில் அவதாரம் படத்தின் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படங்களில் குணச்சித்திர நடிகராகவும், சில படங்களில் வில்லனாகவும் நடித்திருந்தார்.கமலஹாசனின் விருமாண்டி படத்திலும் பாலாசிங் மிகச் சிறப்பாக நடித்திருந்தார். 

பாலாசிங். புதுப்பேட்டை படத்தில் தாதாவாக நடித்திருந்த பாலாசிங் கடைசியாக செல்வராகவன் இயக்கத்தில் வெளியான என் ஜிகே படத்திலும் நடித்திருந்தார்.

அதைத்தொடர்ந்து மகாமுனி உள்ளிட்ட படங்களிலும் நடித்திருந்த இவருக்கு மூச்சுத்திணறல் மற்றும் காய்ச்சல் ஏற்பட்டது. . அதைத் தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்தது.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பாலாசிங் மருத்துவமனையில் காலமானார். பாலாசிங் மரணம் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கிரிஷ் விவகாரத்தில் யாரும் எதிர்பார்க்காத முடிவை எடுத்த முத்து.. ஆடிப்போன மீனா - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
ஜனனியின் புது பிசினஸுக்கு வந்த சிக்கல்... குடைச்சல் கொடுக்க ரெடியான ஆதி குணசேகரன் - எதிர்நீச்சல் தொடர்கிறது